தங்கம் விலை தொடர்ச்சியாக ஏற்றம் கண்டு வருகிறது. கடந்த மாதம் (செப்டம்பர்) 1-ந் தேதி ஒரு கிராம் தங்கம் விலை ரூ.6,695-க்கும், ஒரு பவுன் ரூ.53 ஆயிரத்து 560-க்கும் விற்பனையானது. அதே மாதம் 24-ந் தேதி ஒரு கிராம் தங்கம் 7 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனையானது. ஒரு பவுன் ரூ.56 ஆயிரத்தை தொட்டது. அதன்பிறகு, தங்கத்தின் விலை தொடர்ச்சியாக ஏற்றம் கண்டு வருகிறது. தங்கம் விலையின் புதிய உச்சமாக கடந்த 19-ந் தேதி ஒரு கிராம் தங்கம் ரூ.7 ஆயிரத்து 280-க்கு விற்பனையானது. ஒரு பவுன் ரூ.58 ஆயிரத்து 240 என்ற புதிய உச்சத்தை அடைந்தது. தொடர்ந்து நேற்று முன்தினம் தங்கம் விலை சவரனுக்கு ரூ.520 அதிரடியாக உயர்ந்தது.
இந்நிலையில் சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.360 குறைந்து ரூ.58 ஆயிரத்து 520-க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கம் விலை ரூ.45 குறைந்து ரூ.7,315-க்கு விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி விலையில் இன்று மாற்றம் இல்லை. வெள்ளி விலை ஒரு கிராம் ரூ.107-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
தீபாவளி நேரத்தில் இந்த சிறிய விலை குறைவு வாடிக்கையாளர்களை நிம்மதியடைய வைத்திருக்கிறது.
+ There are no comments
Add yours