சென்னை: சென்னையில் இன்று (செப்.16) 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை ஒரு பவுன் ரூ.55,000-ஐ கடந்து விற்பனையாகிறது. பண்டிகை மற்றும் முகூர்த்த நாட்களுக்கு நகை வாங்க திட்டமிட்ட வாடிக்கையாளர்களுக்கு தங்கம் விலை தொடர்ந்து உயர்வது வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது.
இன்று (செப்.16) காலை நிலவரப்பட்டி 22 கேரட் ஆபரணத் தங்கம் கிராமுக்கு ரூ.15 உயர்ந்து ஒரு கிராம் ரூ.6,880-க்கு விற்கப்படுகிறது. பவுனுக்கு ரூ.120 அதிகரித்து ஒரு பவுன் ரூ.55,040-க்கு விற்கப்படுகிறது. வெள்ளியின் விலையும் கிராமுக்கு ரூ.1 உயர்ந்துள்ளது. இன்று ஒரு கிராம் வெள்ளி ரூ,98-க்கு விற்கப்படுகிறது.
அமெரிக்க பெடரல் வங்கி வட்டி விகிதத்தை குறைத்திருப்பது, சர்வதேச அளவில் தங்கத்தின் தேவை அதிகரிப்பு ஆகிய காரணங்களால் தங்கத்தின் விலை அதிகரித்துள்ளது. அத்துடன், உள்நாட்டிலும் வரும் நாட்கள் பண்டிகை காலம் என்பதாலும், முகூர்த்தநாட்கள் என்பதாலும் தங்கம் விலைஅதிகரித்து வருகிறது. வரும்நாட்களிலும் தங்கத்தின் விலை உயர வாய்ப்புள்ளது என்று நகை வியாபாரிகள் தரப்பில் கூறப்படுகிறது.
+ There are no comments
Add yours