சட்டென சரிந்த தங்கம்: இன்று வாங்கலாமா?

Spread the love

கடந்த இரண்டு நாட்களாக தங்கத்தின் விலை குறைந்ததும் வாங்காமல் இருந்தவர்கள் இன்னும் நேரம் இருக்கு. தங்கம் வாங்க திட்டமிட்டு இருப்பவர்கள் இன்றும் தங்கத்தை வாங்கலாம். ஏனெனில் தங்கத்தின் விலை இன்று பெரிய அளவில் உயரவில்லை.

சவரனுக்கு 40 ரூபாய் மட்டுமே உயர்ந்துள்ளது. மேலும் நாளை ஞாயிற்று கிழமை என்பதால் தங்கத்தின் விலையில் மாற்றம் இருக்காது. எனவே தேவை இருப்பவர்கள் வாங்கலாம். கடந்த இரண்டு நாட்களில் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.1,680 விலை குறைந்துள்ளது.

2024ம் ஆண்டு பிப்ரவரி மாதம் முதல் தங்கத்தின் விலை தொடர்ந்து அதிகரித்து வந்த நிலையில் தற்போது சரிய தொடங்கியுள்ளது.

சென்னையில் ஆபரண தங்கமான 22 காரட் ஒரு கிராம் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.5 உயர்ந்து ரூ. 6,655 ஆக உள்ளது. ஒரு சவரன் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.40 அதிகரித்து ரூ. 53,240 ஆக உள்ளது.

முதலீட்டு நோக்கில் வாங்கப்படும் தங்கமான 24 காரட் ஒரு கிராம் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.5 அதிகரித்து ரூ.7,125 ஆகவும், 8 கிராம் தங்கத்தின் விலை ரூ.56,000 என்ற விலையில் விற்பனையாகிறது.

தங்கத்தின் விலை சற்று உயர்ந்துள்ள நிலையில் வெள்ளியின் விலை சற்று சரிந்துள்ளது. ஒரு கிராம் வெள்ளியின் விலை இன்று கிராமுக்கு 50 பைசா குறைந்து ரூ.96 ஆக உள்ளது. ஒரு கிலோ வெள்ளியின் விலை கிலோவுக்கு ரூ.500 வீழ்ச்சி அடைந்து ரூ.96,000 என்ற விலையில் விற்பனையாகி வருகிறது.


Spread the love

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours