இந்துஸ்தான் பங்குகள் விலை 120 சதவீதம் உயர்வு

Spread the love

ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் நிறுவனம் மார்ச் காலாண்டில் 52% நிகர லாபம் உயர்வை அறிவித்ததை தொடர்ந்து பங்கு விலை கடகடவென உயர்ந்துள்ளது. அதனால் தரகு நிறுவனமான எலாரா செக்யூரிட்டீஸ் நிறுவனத்தின் பங்கை Accumulate நிலையிலிருந்து buy அதாவது வாங்கலாம் என மாற்றியுள்ளது.

ஏனெனில் நிறுவனத்தின் வருவார் YoY) நான்காவது காலாண்டில் (Q4 FY24) ரூ. 4,308.7 கோடியாக உயர்ந்துள்ளது.
தரகு நிறுவனம் PSU பாதுகாப்பு பங்குகளின் இலக்கு விலையை ரூ.4,100 லிருந்து ரூ.5,590 ஆக உயர்த்தியுள்ளது. 2024ஆம் நிதியாண்டில், ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் நிறுவனம் ரூ. 30,380 கோடி வருவாய் ஈட்டியதாக அறிவித்துள்ளது. இது ஏப்ரல் 1ஆம் தேதி அறிவிக்கப்பட்ட தற்காலிக எண்ணிக்கையான ரூ.29,810 கோடியிலிருந்து உயர்த்தியுள்ளது.

காலாண்டில் EBITDA ஆனது முந்தைய ஆண்டை விட 81.8% அதிகரித்து ரூ.5,901.1 கோடியாக இருந்தது, இது கடந்த ஆண்டின் இதே காலக்கட்டத்தில் ரூ. 3,245.8 கோடியாக இருந்தது. மேலும் ஆண்டு முழுவதும், எச்ஏஎல் நிறுவனம் ரூ.19,000 கோடிக்கும் அதிகமான பெரிய ஆர்டர்களைப் பெற்றது மற்றும் ரூ.16,000 கோடி மதிப்பிலான பழுதுபார்ப்பு மற்றும் மாற்றியமைக்கும் ஒப்பந்தங்களைப் பெற்றுள்ளது.
கடந்த ஆறு மாதங்களில் தேசிய பங்குச் சந்தையில் (NSE) HAL பங்கு 119.89 சதவீதத்திற்கும், முந்தைய ஆண்டில் 204.27 சதவீதத்திற்கும் மேலாக உயர்ந்துள்ளது.


Spread the love

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours