இந்திய ஆயுள் காப்பீட்டுக் கழகம் எனப்படும் எல்ஐசி நிறுவனத்தின் பங்கு விலை இன்றைய வர்த்தகத்தில் 4 சதவிகிதம் வரை உயர்ந்துள்ளது.
முன்னதாக, சந்தைக் கட்டுப்பாட்டாளர் பங்குகள் மற்றும் பரிவர்த்தனை வாரியம் 10 சதவீத பொதுப் பங்குகளாக மாற்றுவதற்கு கூடுதலாக மூன்று ஆண்டுகள் அவகாசம் அளிக்கப்பட்டது.
அதாவது 2027ம் ஆண்டு மே 16ம் வரை தேதி காலக்கெடு வழங்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் எல்ஐசி பங்கின் விலை இன்று என் எஸ் இ சந்தையில் ரூ.934 என்ற நிலையில் உள்ளது.
எல்.ஐ.சி ஒரு பங்கின் இன்ட்ராடே அதிகபட்சமான ரூ.962 என்ற நிலையை அடைந்துள்ளது. செவ்வாய் கிழமையின் முடிவில் ரூ. 931க்கு எதிராக 5 சதவீதம் உயர்ந்தது.
லைஃப் இன்சூரன்ஸ் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா, செபியின் ஒப்புதலைப் பெறுவது குறித்து இந்தியப் பங்குச் சந்தைகளுக்குத் தெரிவித்தது.
2022ம் ஆண்டு மே 17ம் தேதி, பிஎஸ்இ மற்றும் என்எஸ்இ சந்தையில் பட்டியலிடப்பட்ட எல்ஐசி பங்குகள் மற்றும் 2024ம் நிதியாண்டின் மே 16ம் தேதி, 10 சதவீத பொது பங்குதாரர் விதிமுறைகளை காப்பீட்டு அடைய வேண்டும்.
இருப்பினும், இந்த பங்குதாரர் விதிமுறையை அடைய காப்பீட்டாளருக்கு கூடுதல் நேரம் தேவைப்பட்டது என தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
+ There are no comments
Add yours