ரூ.43 ஆயிரம் கோடி இழப்பு.. கடும் அழுத்தத்தில் டாடா பங்குகள்!

Spread the love

கடந்த சில நாட்களாகவே டாடா குழுமத்தின் பங்குகள் விற்பனை அழுத்தத்தை கண்டு வருகின்றன. இதன் விளைவாக பங்கு வீழ்ச்சி அடைந்து வருகிறது.

அதாவது வோல்டாஸ், டாடா பவர் மற்றும் டாடா மோட்டார்ஸ் நிறுவனப் பங்குகள் பெரும் பின்னடைவை சந்தித்துள்ளன. இந்த நிறுவனங்களின் காலாண்டு முடிவுகள் வெளியான பிறகு பங்குகளின் விலை சரிவை சந்தித்துள்ளன.

இனிவரும் நாட்களில் இந்த போக்கு தொடரும் என துறைச் சார்ந்த நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். முந்தைய வர்த்தக அமர்வில் டாடா மோட்டார்ஸ் பங்கின் விலை 8 சதவிகிதம் வீழ்ச்சி அடைந்தது. கடந்த 2 ஆண்டுகளில் இண்ட்ரா டே வர்த்தகத்தில் டாடா மோட்டார்ஸ் பங்கு இவ்வளவு பெரும் வீழ்ச்சியை சந்திக்கவில்லை.

கடந்த ஆறு வர்த்தக நாட்களில் டாடா மோட்டார்ஸ் பங்கின் விலை 6.70% வரை சரிவைச் சந்தித்தன. இதன் விளைவாக நிறுவனத்தின் சந்தை மதிப்பு ரூ.22,592.60 கோடியாக சரிந்தது.

இதுமட்டும் இல்லாமல் டாடா பவர் நிறுவனத்தின் பங்கு விலையும் 9.4% வீழ்ச்சியை அடைந்தன. இதன் காரணமாக நிறுவனத்தின் சந்தை மூலதனம் ரூ.14,731 கோடி குறைந்தது.

இதோடு வோல்டாஸ் நிறுவனத்தின் பங்கு விலையும் 12.8 சதவிகிதம் வரை குறைந்ததால் முதலீட்டாளர்கள் பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

மேலும் நிறுவனத்தின் சந்தை மூலதனம் ரூ.5,985.83 கோடியாக குறைந்துள்ளது. ஒட்டுமொத்தமாக, இந்த பங்குகள் சந்தை மூலதனத்தில் ரூ.43,310 கோடி அளவுக்கு இழப்பு ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.


Spread the love

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours