வாடிக்கையாளர்களை அலர்ட் செய்த பஞ்சாப் நேஷனல் வங்கி; காரணம் என்ன?

Spread the love

பஞ்சாப் நேஷனல் வங்கி தனது வாடிக்கையாளர்களுக்கு முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதாவது பஞ்சாப் நேஷனல் வங்கியில் சேமிப்பு கணக்கு உள்ளிட்ட கணக்குகள் வைத்திருந்து.

அந்த கணக்கு 3 ஆண்டுகளுக்கு மேல் செயல்படவில்லை எனில் அந்த கணக்கை ரத்து செய்ய உள்ளதாக தெரிவித்துள்ளது.

இது குறித்து வெளியான அறிக்கையில், “இது போன்ற செயல்படாத வங்கி கணக்குகளால், வங்கியின் நடைமுறையில் சிக்கல் இருப்பதாக தெரிவித்துள்ளது.

மேலும் இதுபோன்று 3 ஆண்டுகளாக செயல்படாத வங்கி கணக்குகளை தவறாக பயன்படுத்த வாய்ப்பு இருப்பதால் இந்த நடவடிக்கையை மேற்கொள்வதாக தெரிவித்துள்ளது.

அதாவது 2024ம் ஆண்டு ஏப்ரல் 30 ம் தேதி வரை 3 ஆண்டுகளாக பயன்படுத்தாத வங்கி கணக்குகள் ரத்து செய்யப்படும்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதே நேரத்தில் வாடிக்கையாளர்கள் தேவையெனில் அந்த சேமிப்பு கணக்குகளை தொடர்ந்து பயன்படுத்துவதற்கான வாய்ப்பையும் வங்கி வழங்குகிறது.

3 ஆண்டுகளாக செயல்படாத வங்கி கணக்கு வைத்திருக்கும் வாடிக்கையாளர்கள், அந்த கணக்கை பயன்படுத்த விரும்பினால் அவர்களின் கே ஓய் சி ஆவணங்களை கொடுத்து கணக்கை புதுப்பித்துக் கொள்ளலாம்.


Spread the love

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours