இந்திய பங்குச்சந்தைகள் தொடர்ந்து புதிய உச்சம் அடைந்து வரும் நிலையில் முதலீட்டாளர்கள் எந்த பங்கை வாங்கினால் கூடுதல் லாபம் பார்க்க முடியும் என நிபுணர்கள் பலரும் பங்குகளை பரிந்துரை செய்துள்ளனர்.
சென்செக்ஸ் 141.34 புள்ளிகள் உயர்ந்து 77,478.93 ஆகவும், நிஃப்டி 50 51.00 புள்ளிகள் அதிகரித்து 23,567.00 ஆகவும் வியாழன் வர்த்தகம் முடிவடைந்தது.
அதாவது ஜூன் 20ம் தேதி வர்த்தகத்தில் இந்திய பங்குச்சந்தைகள் வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்து வர்த்தகமானது.
இதனால் முதலீட்டாளர்கள் பெரும் மகிழ்ச்சி அடைந்தனர். இந்த நிலையில் பிரபுதாஸ் லில்லாதேரின் தொழில்நுட்ப ஆராய்ச்சி நிறுவனத்தின் துணைத் தலைவர் வைஷாலி பரேக் முதலீட்டாளர்கள் அதிக லாபம் ஈட்ட சில பங்குகளை பரிந்துரை செய்துள்ளார்.
என்எம்டிசி நிறுவனத்தின் பங்கை ரூ. 273.25க்கு வாங்கலாம். இதன் இலக்கு விலை ரூ.286 என்றும், ஸ்டாப்லாஸ் ரூ.267 என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மகாநகர் கேஸ் நிறுவனத்தின் பங்கை ரூ.1506க்கு வாங்கலாம் என்றும், இதன் இலக்கு விலை ரூ.1575 என்றும், ஸ்டாப்லாஸ் ரூ.1470 எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
+ There are no comments
Add yours