உள்நாட்டுப் பங்குச் சந்தைகளின் வர்த்தகம் நேற்று ஏற்றத்துடன் முடிவடைந்தது. நிஃப்டி முதல் முறையாக 23,490 என்ற நிலைக்கு சென்றது. புதிய சாதனையை நிகழ்த்தி சந்தைகள் உயர்வுடன் முடிவடைந்தது.
நிஃப்டி 23,490 என்ற புதிய சாதனையை படைத்தது. நிஃப்டி 66 புள்ளிகள் உயர்ந்து 23,465 புள்ளிகளில் நிறைவடைந்தது.
மேலும் சென்செக்ஸ் 181 புள்ளிகள் உயர்ந்து 76,992 புள்ளிகளில் நிறைவடைந்தது. நிஃப்டி வங்கியும் 155 புள்ளிகள் உயர்ந்து 50,002 புள்ளிகளில் நிறைவடைந்தது.
நிஃப்டி மிட் மற்றும் ஸ்மால் கேப் பங்குகளில் பெரிய லாபம் பதிவானது. இரண்டு குறியீடுகளும் சாதனை உச்சத்துடன் நிறைவடைந்தன. ஸ்மால்கேப் 0.76% உயர்ந்து 18,043.60 ஆகவும், மிட்கேப் 1.05% உயர்ந்து 55,225.95 ஆகவும் முடிவடைந்தது.
இதற்கிடையில், பராஸ் டிபென்ஸ், பி.இ.எம்.எல், மஸகான் டாக், இ.ஐ.ஹெச் அசோசியேட்டட், எஸ்.கே.எஃப் இந்தியா, ஸென் டெக், செம்பிளாஸ்ட் சன்மார், ஏபிபி இந்தியா உள்ளிட்ட பங்குகள் லாபம் பார்த்தன. அதேநேரம் வோடபோன் ஐடியா பங்குகளும் லாபம் பார்த்தன.
+ There are no comments
Add yours