திங்கட்கிழமை வர்த்தகத்தில் அதுல், பெர்ஜர் பெயிண்ட்ஸ், கேஆர்பிஎல், ரூட் மொபைல், டாடா எல்க்ஸி, ராம்கோ சிமெண்ட்ஸ் மற்றும் அனுபம் ரசயான் பங்குகள் 52 வாரக் குறைந்த விலையை எட்டியதால் அதிக அளவு விற்பனைக்கு செல்லலாம் எனவும் கணிக்கப்பட்டுள்ளது.
நாளை பங்குச் சந்தையில் ஜிண்டால் ஸ்டெயின்லெஸ், அதானி பவர், கோதாவரி பவர், ஜூபிடர் வேகன்கள், புளூ ஸ்டார் மற்றும் கேஎன்ஆர் கன்ஸ்ட்ரக்ஷன்ஸ் பங்குகள் அதிக அளவில் வாங்க வாய்ப்புள்ளது.
கடந்த வார தொடர் சரிவை பங்குச் சந்தை சந்தித்தாலும், வெள்ளிக்கிழமை நேர்மறையாக முடிந்தது, முதலீட்டாளர்களுக்கு ஒரு நல்ல செய்திதான். அதேசமயம் திங்களன்று பங்குச் சந்தை சற்று ஏறுமுகம் காணலாம் என நிபுணர்கள் கூறுகின்றனர்.
ஏனெனில் NSE நிஃப்டி 50 0.2% அதிகரித்து 22,531 புள்ளிகளிலும், S&P BSE சென்செக்ஸ் 0.1% அதிகரித்து 73,961 புள்ளிகளுடன் வர்த்தகத்தை முடிவு செய்துள்ளன.
வெள்ளியன்று இந்திய பங்குச் சந்தை குறியீடுகள் அதிக ஏற்ற, இறக்கத்துடன் வர்த்தகத்தை தொடங்கி இறுதியில் சற்று நிம்மதி அளிக்கும் வகையில் ஏற்றத்துடன் முடிவடைந்தது. ஆனாலும் செவ்வாய்க்கிழமை (ஜூன் 4,2024) முன்பாக பங்குச் சந்தை எப்படி தொடங்கும் என்பது கேள்விக் குறியாகவே உள்ளது.
+ There are no comments
Add yours