தமிழ்நாட்டில் இளநீர் விற்பனை விலை கடந்த சில நாள்களாக அதிகரித்து காணப்படுகிறது.
இது குறித்து, ஆனைமலை இளநீர் உற்பத்தியாளர்கள் சங்கத்தின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீனிவாசன், “கடந்த சில வாரங்களாக கோடை வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளதால், பொது மக்கள் இளநீரை விரும்பி பருகி வருகின்றனர்.
இந்த வாரம் நல்ல தரமான குட்டை, நெட்டை வீரிய ஒட்டு ரக மரங்களின் இளநீர் விலை, கடந்தவார விலையை விட ஒரு ரூபாய் உயர்த்தப்பட்டு, ரூ.38 ஆக நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.
ஒரு டன் இளநீரின் விலை ரூ.15,000 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 400 மில்லி அளவுக்கு தண்ணீர் கொண்ட முதல் தர இளநீர் ரூ.80 வரை விற்கப் படுகிறது. இந்தாண்டு எப்போதும் இல்லாத அளவுக்கு, இளநீர் வரத்து மிகவும் குறைந்துவிட்டது. அதே நேரம் இளநீரின் தேவை உச்சத்தில் உள்ளது” என்றார்.
கடந்த சில நாள்களாக வெயில் தாக்கம் அதிகரித்து காணப்பட்ட நிலையில், சில இடங்களில் மழை பெய்தது குறிப்பிடத்தக்கது.
+ There are no comments
Add yours