ஏப்ரல் மாதம் முதல் நாளே அதிரடியாக தங்கம் விலை உயர்ந்து உச்சத்தை தொட்ட நிலையில் இன்று சரிந்துள்ளது. சென்னையில் நேற்று ஏப்ரல் 1ஆம் தேதி தங்கம் விலை சவரனுக்கு ரூ.680 உயர்ந்த நிலையில் இன்று அதிரடியாக குறைந்துள்ளது.
அதன்படி இன்று ஏப்ரல் 2ஆம் தேதி 22 காரட் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.25 குறைந்து ஒரு கிராம் ரூ6,430க்கும், சவரனுக்கு ரூ.200 குறைந்து ஒரு சவரன் ரூ.51,440க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
இதே போன்று 18 காரட் தங்கம் விலையும் கிராமுக்கு ரூ.21 குறைந்து ஒரு கிராம் ரூ.5,267க்கும், சவரனுக்கு ரூ.168 குறைந்து ஒரு சவரன் ரூ.42,136க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
வெள்ளி விலை மட்டும் கிராமுக்கு 40 காசுகள் உயர்ந்து ஒரு கிராம் ரூ.82.00க்கும் , ஒரு கிலோ வெள்ளி ரூ.82,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
இந்தியாவில் தங்கம் விலை ஒருநாள் உயருவதும், மறுநாள் கொஞ்சம் குறைவதுமாக ஆட்டம் காட்டி வருகிறது. , கடந்த சனிக்கிழமை தங்கம் விலை சவரனுக்கு ரூ. 160 குறைந்தது. ஆனால், நேற்று திங்கள்கிழமை தங்கம் விலை மீண்டும் வரலாறு காணாத உச்சத்தை எட்டியது.
சவரனுக்கு ரூ. 680 அதிகரித்து ஒரு சவரன் ரூ. 51,640-க்கும், கிராமுக்கு ரூ. 85 அதிகரித்து ஒரு கிராம் தங்கம் ரூ.6,455-க்கும் விற்பனை செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
+ There are no comments
Add yours