திடீரென சரிந்த தங்கம்: காரணம் என்ன?

Spread the love

தங்கத்தின் விலை தொடர்ந்து அதிகரித்து வந்த நிலையில், கடந்த சில நாட்களாக ஒருவிதமான ஏற்ற இறக்கத்தில் உள்ளது.

ஏப்ரல் 24ம் தேதியான நேற்று தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.240 அதிகரித்த நிலையில், ஏப்ரல் 25ம் தேதியான இன்று சவரனுக்கு ரூ.160 குறைந்துள்ளது.

அதாவது ஒரு சவரன் தங்கத்தின் விலை 54,000 ரூபாய்க்கு கீழ் சரிந்துள்ளது. இதனால் தங்கம் வாங்க திட்டமிட்டு இருந்தவர்கள் சற்று நிம்மதி அடைந்துள்ளனர்.

தங்கத்தின் விலை தொடர்ந்து அதிகரித்து வந்த நிலையில், கடந்த சில நாட்களாக ஒருவிதமான ஏற்ற இறக்கத்தில் உள்ளது. ஏப்ரல் 24ம் தேதியான நேற்று தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.240 அதிகரித்த நிலையில், ஏப்ரல் 25ம் தேதியான இன்று சவரனுக்கு ரூ.160 குறைந்துள்ளது.

அதாவது ஒரு சவரன் தங்கத்தின் விலை 54,000 ரூபாய்க்கு கீழ் சரிந்துள்ளது. இதனால் தங்கம் வாங்க திட்டமிட்டு இருந்தவர்கள் சற்று நிம்மதி அடைந்துள்ளனர்.

சென்னையில் ஆபரண தங்கமான 22 காரட் ஒரு கிராம் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.20 சரிந்து ரூ. 6,710 ஆக உள்ளது. ஒரு சவரன் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.160 வீழ்ச்சி அடைந்து ரூ. 53,680 ஆக உள்ளது.

தங்கத்தைப் போன்று வெள்ளியின் விலையும் சற்று குறைந்துள்ளது. அதாவது ஒரு கிராம் வெள்ளியின் விலை கிராமுக்கு 50 பைசா குறைந்து ரூ.86 ஆக உள்ளது. ஒரு கிலோ வெள்ளியின் விலை கிலோவுக்கு ரூ.500 குறைந்து ரூ.86,000 என்ற விலையில் விற்பனையாகி வருகிறது.


Spread the love

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours