டாடா நிறுவனத்தின் லாபம் அதிகரிப்பு.. எவ்வளவு தெரியுமா?

Spread the love

இந்தியாவின் முன்னணி வாகனத் தயாரிப்பு நிறுவனமான டாடா மோட்டார்ஸ் 2023-24ம் நிதியாண்டின் 4வது காலாண்டு முடிவுகளை அறிவித்துள்ளது.

ஜனவரி முதல் மார்ச் வரையான காலாண்டில் ரூ. 17,529 கோடி அளவுக்கு நிகர லாபம் ஈட்டியுள்ளது. இதற்கு முந்தைய ஆண்டின் நிகர லாபமான ரூ.12,033 கோடியாக உள்ளது. கடந்த ஆண்டையை விட 46% அதிகமாகும்.

இதையடுத்து நிறுவனம் முதலீட்டாளர்கள் வைத்திருக்கும் பங்குகளுக்கு டிவிடெண்ட் வழங்குவதாக அறிவித்துள்ளது. அதாவது ஒரு பங்குக்கு ரூ. 6 இறுதி டிவிடெண்ட் வழங்க உள்ளதாக தெரிவித்துள்ளது. இதற்கான ரெக்கார்ட் தேதி ஜூன் 28 என்றும் கூறியுள்ளது.

ஜனவரி முதல் மார்ச் காலாண்டில் நிறுவனத்தின் வருவாய் ரூ. 1.20 லட்சம் கோடியாக இருந்தது. அதாவது வருவாய் கிட்டதட்ட 13.3% வளர்ச்சி அடைந்துள்ளது. 2023-24ம் நிதியாண்டின் 4வது காலாண்டில் வட்டி, வரிகள், தேய்மானம் மற்றும் கடன்தொகைக்கு முந்தைய வருவாய் (EBITDA) ரூ. 17,900 கோடியாக உள்ளது.

வரிக்கு முந்தைய லாபம் (பிபிடி) ரூ.9,500 கோடியாக இருந்தது. நிகர வாகனக் கடன் ரூ.16,000 கோடியாகக் குறைந்தது.

டாடா மோட்டார்ஸ், முழு ஆண்டு முழுவதும் உள்நாட்டு தேவையில் எச்சரிக்கையுடன் நம்பிக்கையுடன் இருப்பதாகவும், அரையாண்டில் ஒப்பீட்டளவில் பலவீனமாக இருக்கும் என்று எதிர்பார்ப்பதாகவும் தெரிவித்துள்ளது. பிரீமியம் சொகுசுப் பிரிவின் தேவை, ஒட்டுமொத்த தேவையின் மீதான கவலைகள் இருந்தபோதிலும், நெகிழ்ச்சியுடன் இருக்கும்.

ஜாகுவார் லேண்ட் ரோவர், நிறுவனம் 7.9 பில்லியன் பவுண்டுகள் மற்றும் 29 பில்லியன் பவுண்டுகள் என்ற வருவாயை ஈட்டியுள்ளதாக தெரிவித்துள்ளது. இந்த வருவாய் 4வது காலாண்டு மற்றும் 2023-24 நிதியாண்டுக்கானது என தெரிவிக்கப்பட்டுள்ளது.


Spread the love

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours