தங்கம் விலை தொடர்ந்து அதிகரித்துக்கொண்டே வருகிறது. இதன் ஒரு பகுதியாக கடந்த 19ம் தேதி ஒரு சவரன் தங்கம் விலை அதிகபட்சமாக ரூ.55,120க்கும் விற்பனையானது.
இந்த அதிரடி விலை உயர்வு நகை வாங்குவோரை கடும் அதிர்ச்சியில் ஆழ்த்தி வந்தது. இந்த நிலையில் கடந்த 23ம் தேதி யாரும் எதிர்ப்பார்க்காத வகையில் தங்கம் விலை அதிரடியாக சவரனுக்கு ரூ.1160 குறைந்து, ஒரு சவரன் ரூ.53,600க்கு விற்கப்பட்டது.
ஆனால் மறுநாளே மீண்டும் விலை அதிகரித்தது. 24ம் தேதி தங்கம் விலை சவரனுக்கு ரூ.240 அதிகரித்து ஒரு சவரன் ரூ.53,840க்கு விற்கப்பட்டது. 25ம் தேதி தங்கம் விலையில் மீண்டும் மாற்றம் காணப்பட்டது.
சவரனுக்கு ரூ.160 குறைந்து ஒரு சவரன் ரூ.53,680க்கும் விற்கப்பட்டது. 26ம் தேதி தங்கம் விலை சவரனுக்கு ரூ.360 அதிகரித்து ஒரு சவரன் ரூ.54,040க்கும் விற்கப்பட்டது.
இந்த நிலையில் 27ம் தேதி நேற்றும் தங்கம் விலை அதிகரித்தது. கிராமுக்கு ரூ.15 அதிகரித்து ஒரு கிராம் ரூ.6,770க்கும், சவரனுக்கு ரூ.120 உயர்ந்து ஒரு சவரன் ரூ.54,160க்கு விற்கப்பட்டது.
2 நாட்களில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.480 உயர்ந்தது. இவ்வாறு தொடர்ச்சியாக உயர்ந்து வரும் தங்கம் விலை நகை வாங்குவோருக்கு மத்தியில் கலக்கத்தை எற்படுத்ததியுள்ளது.
+ There are no comments
Add yours