சோமோட்டோ நிறுவனம் 2023-24ம் நிதியாண்டின் ஜனவரி முதல் மார்ச் மாதம் வரையான 4ம் காலாண்டு முடிவுகளை வெளியிட்டுள்ளன.
இ-காமர்ஸ் துறையில் உணவு டெலிவரி செய்யும் நிறுவனமான சோமோட்டோ, அதிக பணவீக்கம், தேவை குறைவு ஆகிய பிரச்னைகள் இருந்த போதிலும், நிறுவனத்தின் வருவாய் 73 சதவீதம் அதிகரித்து ரூ.3,562 கோடியாக உள்ளது.
கடந்த ஆண்டு இதே காலாண்டில், ஜோமோட்டோ ரூ.188 கோடி நிகர இழப்பையும், ரூ.2,056 கோடி வருவாய் நிறுவனம் ஈட்டியிருந்தது.
இந்நநிறுவனத்தின் பங்கு விலை அதன் முக்கிய வணிகத்தில் அதிகரித்து வரும் லாபம் மற்றும் அதன் விரைவான வர்த்தகப் பிரிவான Blinkitயின் வளர்ச்சியில் மூலமாக உயர்ந்து வருகிறது.
கோல்ட்மேன் சாக்ஸ் குரூப் இன்க். Zomatoவின் விரைவு வர்த்தக வணிகமான Blinkit க்கான லாப கணிப்புகள் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கிறது.
நிறுவனத்தின் வருவாயும், லாபமும் கணிசமாக அதிகரித்த போதிலும், ஜோமோட்டோ பங்கின் விலை 3.48 சதவிகிதம் அதிகரித்து ரூ.194.30 ஆக சரிந்துள்ளது.
+ There are no comments
Add yours