தமிழ்நாட்டின் 11 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
தென்கிழக்கு வங்கக்கடலில் நிலவி வரும் காற்றழுத்த தாழ்வு பகுதியின் காரணமாக சைதாப்பேட்டை, அசோக் நகர், தேனாம்பேட்டை, அடையாறு, ஆயிரம் விளக்கு, கிண்டி, சேப்பாக்கம் உள்ளிட்ட சென்னையின் பல்வேறு இடங்களில் நேற்று இரவு முதல் பரவலாக மழை பெய்து வருகிறது.
காற்றின் வேகம் அதிகமாக இருப்பதால் மீனவர்கள் யாரும் கடலுக்கு செல்லவேண்டாம் என்றும் அறிவித்தப்பட்டுள்ளது .இதுமட்டுமின்றி தமிழன் வேகம் அதிகரித்து வருவதால் அணைகள் மற்றும் ஏரிகள் அனைத்தும் வேகமாக நிரம்பி வருகிறது.
இந்நிலையில் சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், கள்ளக்குறிச்சி, விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, திருவாரூர், நாகை, தஞ்சாவூர், புதுக்கோட்டை, தூத்துக்குடி, ராமநாதபுரம், திருவண்ணாமலை ஆகிய 15 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்கு மழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும் சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
+ There are no comments
Add yours