திருவனந்தபுரம்: கேரள மாநிலத்தில் வியாழக்கிழமை காலையில் பல இடங்களில் கனமழை பெய்த நிலையில், அங்கு மூன்று மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.
கனமழை காரணமாக பத்தனம்திட்டா, எர்ணாகுளம் மற்றும் இடுக்கி ஆகிய மூன்று மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. அதேபோல் திருவனந்தபுரம், கொல்லம், ஆலப்புழா, கோட்டயம் மற்றும் திருச்சூர் ஆகிய ஐந்து மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. பாலக்காடு, மலப்புரம், கோழிக்கோடு மற்றும் வயநாடு மாவட்டங்களுக்கு மஞ்சள் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.
24 மணி நேரத்தில் பெய்யும் மழை அளவின் அடிப்படையில் இந்த அலர்ட்கள் விடுக்கப்படுகின்றன. ரெட் அலர்ட் என்பது 20 செ.மீ.-க்கு அதிகமான மிக அதிக கனமழையைக் குறிக்கும், ஆரஞ்சு அலர்ட் என்பது 11 முதல் 20 செ.மீ. வரை அதிக கனமழையைக் குறிக்கும், மஞ்சள் அலர்ட் என்பது 6 முதல் 11 செ.மீ வரையிலான கனமழையைக் குறிக்கும். முன்னதாக, அடுத்த ஐந்து நாட்களுக்கு கேரள மாநிலத்தின் சில பகுதிகளில் இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
+ There are no comments
Add yours