நடந்து முடிந்த தேர்தலில் தொழிலாளர் கட்சி வெற்றி பெற்றதன் மூலம் பிரிட்டனின் புதிய பிரதமராக கெய்ர் ஸ்டார்மரை அதிகாரப்பூர்வமாக மன்னரின் மாளிகை அறிவித்தது.
பிரிட்டன் பொதுத் தேர்தல் நேற்று நடைபெற்றது. மொத்தம் 4.6 கோடி பேர் வாக்களித்த இத்தேர்தலுக்காக 40 ஆயிரம் வாக்குப்பதிவு மையங்கள் அமைக்கப்பட்டன. இந்தத் தேர்தல் வாக்குச் சீட்டு முறையில் நடத்தப்பட்டது.
இத்தேர்தலில் ஆளும் கட்சியான, பிரதமர் ரிஷி சுனக் தலைமையிலான கன்சர்வேட்டிவ் கட்சிக்கும், கெய்ர் ஸ்டார்மர் தலைமையிலான தொழிலாளர் கட்சிக்கும் இடையே போட்டி நிலவியது. வாக்குப்பதிவு முடிவடைந்ததுமே வாக்கு எண்ணிக்கை துவங்கியது. தொழிலாளர் கட்சி பெரும்பான்மைக்கு தேவையான இடங்களைக் கடந்து 360 இடங்களில் வெற்றி பெற்றது.
இதன்மூலம் பிரிட்டனின் புதிய பிரதமராக கெய்ர் ஸ்டார்மரை அதிகாரப்பூர்வமாக மன்னரின் மாளிகை அறிவித்தது.
தொழிலாளர் கட்சித் தலைவர் கெய்ர் ஸ்டார்மர் பிரிட்டனின் புதிய பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். பிரதமராக பதவியேற்க வருமாறு ஸ்டார்மருக்கு மன்னர் 3ஆம் சார்லஸ் அழைப்பு விடுத்துள்ளார்.
+ There are no comments
Add yours