இது குடியிருப்பா அல்லது நகரமா? வியக்க வைக்கும் அப்பார்ட்மெண்ட்!

Spread the love

சீனாவில் உள்ள ஒரு கட்டிடம் தொடர்பான தகவல் சமூகவலைதளங்களில் அதிகம் பேசப்படுகிறது. 36 மாடிகளைக் கொண்ட இந்த கட்டிடத்தில் முப்பதாயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர். இந்தக் கட்டிடம் ஒரு நகரத்தை போல் உள்ளது.  உலகில் மக்களின் கவனத்தை ஈர்க்கும் பல விஷயங்கள் உள்ளன. குறிப்பாக வியக்கவைக்கும் அளவிற்கு பல கட்டிடங்கள் கட்டப்பட்டுள்ளன. கவர்ச்சிகரமான வடிவமைப்பு காரணமாக அவை அனைவராலும் வியந்து பார்க்கப்படுகின்றன.

வினோதமான கட்டுமானங்களை உருவாக்குவதில் சீனர்கள் வல்லுநர்கள். சீனாவில் இதுபோன்ற ஆச்சரியமூட்டும் பல கட்டிடங்கள் இருக்கின்றன. அந்த வகையில் பிரம்மாண்ட கட்டிடம் ஒன்று பத்து ஆண்டுகளுக்கு முன்பு சீனாவில் கட்டப்பட்டுள்ளது. அந்த கட்டிடத்தில் இப்போது மொத்தம் முப்பதாயிரம் பேர் வசிக்கின்றனர். இத்தனை பேர் இந்த கட்டிடத்தில் வசிக்கும் நிலையில் அவர்களுக்குத் தேவையான அனைத்து வசதிகளும் அந்த கட்டித்திற்குள்ளேயே இருப்பது அனைவரையும் வியக்க வைக்கிறது.

சீனாவின் ஹாங்சோவில் உள்ள கியான்ஜியாங் செஞ்சுரி சிட்டியில் கட்டப்பட்ட ரீஜண்ட் இன்டர்நேஷனல் அபார்ட்மென்ட் தான் அந்தக் குடியிருப்பு. S வடிவத்தில் கட்டப்பட்டுள்ள இந்தக்  கட்டிடத்தில் மொத்தம் 30,000 பேர் வாழ்கின்றனர். இந்த குடியிருப்பு ஒரு நகரத்தைப் போலவே இருக்கிறது. இந்த 36 மாடி கட்டிடம் 2013 இல் திறக்கப்பட்டது. அப்போது இருபதாயிரம் பேர் அதில் வாழ்ந்தனர். இப்போது பத்து ஆண்டுகளுக்குப் பிறகு இங்கு வசிப்பவர்களின் எண்ணிக்கை முப்பதாயிரத்தை எட்டியுள்ளது.

இந்த அபார்ட்மெண்ட் ஒரு காலத்தில் ஹோட்டலாக இருந்தது. ஆனால் தற்போது அடுக்குமாடி குடியிருப்புகளாக மாற்றப்பட்டுள்ளது. இந்த கட்டிடம் 206 மீட்டர் உயரம் கொண்டது. மேலும் இது 36 மாடிகளைக் கொண்டுள்ளது. இதில் பல வகையான வசதிகள் செய்யப்பட்டுள்ளன. இந்த கட்டிடத்தில் ஒரு பெரிய உணவு விடுதி உள்ளது. நீச்சல் குளம், முடிதிருத்தும் கடை,  சலூன், பல்பொருள் அங்காடி மற்றும் இணைய தள மையம் ஆகியவையும் உள்ளன. இந்த கட்டிடத்தில் வசிக்கும் மக்கள் எதற்கும் வெளியே செல்ல தேவையில்லை. இந்த கட்டிடத்திலேயே அவர்களுக்கான அனைத்தும் கிடைக்கிறது.

இந்த கட்டிடம் தொடர்பான பதிவு சமூக வலைதளங்களில் பகிரப்பட்டது. இந்தக் கட்டிடம் குறித்து பலரும் தங்கள் கருத்துக்களைத் தெரிவித்து வருகின்றனர். இதை ஏன் ஒரு நகரமாக அறிவிக்கக்கூடாது என்று ஒருவர் தனது கருத்தை பதிவிட்டுள்ளார். இந்தக் கட்டிடத்தில் பெரும்பான்மையாக இளைஞர்கள் இருக்கிறார்கள். அதே போல கனிசமான அளவில் சிறு வணிகர்களும் இருக்கிறார்கள். இந்தக் கட்டிடம் தொடர்பான தகவல் இணையத்தில் வைரலாகி வருகிறது.


Spread the love

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours