சினேகன் வழக்கை ரத்து செய்த உயர் நீதிமன்றம்!

Spread the love

பாஜக நிர்வாகியான நடிகை ஜெயலட்சுமி அளித்த புகாரில் பாடலாசிரியர் சினேகன் மீது பதிவுசெய்யப்பட்ட வழக்கை சென்னை உயர் நீதிமன்றம் ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது.

மக்கள் நீதி மய்யம் கட்சியின் செயற்குழு உறுப்பினராக இருந்து வருபவர் சினிமா பாடாலாசிரியர் சினேகன். இவர் ‘சினேகம் பவுண்டேசன்’ என்ற பெயரில் தொண்டு நிறுவனம் ஒன்றை நடத்தி வருகிறார். இந்த அமைப்பில் சினிமா நடிகையும், பாஜக மாநில மகளிர் அணி தலைவருமான ஜெயலட்சுமி என்பவரும் நிர்வகியாக இருப்பதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், கடந்த 2022ம் ஆண்டு “சினேகம் அறக்கட்டளை” பெயரை கூறி பொதுமக்களிடம் பணம் வசூலித்து, ஜெயலட்சுமி மோசடி செய்ததாக சென்னை மாநகர காவல் ஆணையரகத்தில் பாடலாசிரியர் சினேகன் புகார் அளித்தார். அதனடிப்படையில் ஜெயலட்சுமி மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்தனர்.

இந்நிலையில் தன் மீது சினேகன் தவறான குற்றச்சாட்டுகளை சுமத்தி புகார் அளித்து தமது பெயருக்கு களங்கம் ஏற்படுத்தியாக கூறி சினேகன் மீது ஜெயலட்சுமியும் புகாரளித்தார். இதனடிப்படையில் சினேகன் மீது திருமங்கலம் போலீஸார் வழக்குப்பதிவு செய்தனர். முன்னதாக சினேகம் பவுண்டேசன் யாருடையது என்பதை விசாரிக்க சைபர் கிரைம் போலீஸார், இருதரப்பையும் அழைத்து விசாரணை நடத்தி, சமாதானமாக போகுமாறு அறிவுறுத்தியிருந்தனர்.

இருப்பினும் சமாதானமாகாத இருதரப்பினரும், எழும்பூர் நீதிமன்றத்தில் வழக்குப்பதிவு செய்திருந்தனர். இதையடுத்து தன் மீதான வழக்கை ரத்து செய்யக்கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் சினேகன் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கு நீதிபதி தமிழ்செல்வி முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது சினேகன் சார்பில் வழக்கறிஞர் ஸ்ரீதர் ஆஜராகி, தனது “சினேகம் பவுண்டேஷன்” என்ற பெயரை விஜயலட்சுமிதான் தவறாக பயன்படுத்தி மோசடி செய்ததாகவும், சினேகன் மீது பொய்யாக அளிக்கப்பட்ட புகாரில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது என்றும் வாதிட்டார். இதையடுத்து சினேகன் மீதான வழக்கை ரத்து செய்து நீதிபதி தமிழ்செல்வி உத்தரவிட்டுள்ளார்.


Spread the love

More From Author

+ There are no comments

Add yours