இந்தியாவின் மிகப்பெரும் பணக்காரரான முகேஷ் அம்பானியின் மகன் ஆனந்த் அம்பானி, வெறும் 6 மாதங்களில் 108 கிலோ எடையை குறைத்துள்ளார்.
ஜியோ பிளாட்ஃபார்ம்களின் இயக்குநராக உள்ள ஆனந்த் அம்பானிக்கு, ரிலையன்ஸ் ரீடெய்ல் வென்ச்சர்ஸ் லிமிடெட்-ன் இயக்குநர் பொறுப்பும் வழங்கப்பட்டுள்ளது. ஆஸ்துமா மருந்துகள் எடுத்துக் கொண்டதால் இவருக்கு உடல் எடை அதிகரித்தது.
இந்நிலையில், தீவிர உணவுக்கட்டுப்பாடு மற்றும் உடற்பயிற்சியின் காரணமாக ஆனந்த் அம்பானி, கடந்த 6 மாதங்களில் 108 கிலோ எடையை குறைத்துள்ளார். எடையை குறைக்க அவர் பின்பற்றிய உணவு மற்றும் உடற்பயிற்சி குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஆனந்த் அம்பானியின் பயிற்சியாளர் வினோத் சன்னா அளித்த பேட்டி ஒன்றில், ஆனந்த் அம்பானி, குறைந்த கொழுப்புள்ள உணவைப் பின்பற்றினார் என்றும் அவரது உணவில் நிறைய காய்கறிகள், பாலாடைக்கட்டி, பருப்பு வகைகள் சேர்க்கப்பட்டதாகவும் கூறியுள்ளார்.
நாள் முழுவதும் சீரான இடைவெளியில் உணவு சாப்பிட்ட ஆனந்த் அம்பானி, தண்ணீரையும் அதுபோல் சீரான இடைவெளியில் உட்கொண்டுள்ளார். அதுமட்டும் இல்லாமல், 21 கிலோ மீட்டர் நடைபயிற்சி, பளு தூக்குதல், கார்டியோ, யோகா போன்றவற்றை தினமும் 5-6 மணிநேரம் செய்துள்ளார்.
+ There are no comments
Add yours