மக்களவைத் தேர்தல் முடிந்த நிலையில், நாடு முழுவதும் உள்ள சுங்கச்சாவடிகளில் இன்று நள்ளிரவு முதல் சுங்கச்சாவடி கட்டண உயர்வு அமலுக்கு வருகிறது என்று அறிவிக்கப்பட்ள்ளது.
கடந்த ஏப்ரல் 1-ம் தேதி சுங்கச்சாவடி கட்டணம் மாற்றியமைக்கப்படும் என அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில் மக்களவைத் தேர்தலுக்கான அறிவிப்பு வெளியானது. இதையடுத்து சுங்கச்சாவடி கட்டண மாற்றம் இரண்டு மாதங்களுக்கு நிறுத்தி வைக்கப்படுவதாக இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் அறிவித்தது.
மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக அறிவிக்கப்பட்டு நடத்தப்பட்டது. நேற்று 57 தொகுதிகளுடன் நடந்த வாக்குப்பதிவோடு மக்களவைத் தேர்தல் நிறைவடைந்தது.
இந்த நிலையில், நாடு முழுவதும் உள்ள சுங்கச்சாவடிகளில் இன்று நள்ளிரவு முதல் கட்டண உயர்வு அமலுக்கு வருவதாக இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் தெரிவித்துள்ளது. தமிழ்நாட்டில் மொத்தம் 339 சுங்கச்சாவடிகள் அமைந்துள்ளன. தமிழக தேசிய நெடுஞ்சாலைகளில் 55 சுங்கச்சாவடிகள் இருக்கும் நிலையில், இவற்றில் முதற்கட்டமாக 5 சுங்கச்சாவடிகளில் கட்டண உயர்வு அமலுக்கு வருகிறது.
அதன்படி கட்டணம் 5 ரூபாயிலிருந்து 20 ரூபாயாக உயர்த்தப்படுகிறது. மாதாந்திர சுங்கச்சாவடி கட்டணம் 200 ரூபாயிலிருந்து 400 ரூபாயாக உயர்கிறது. வழக்கத்தைப் போல ஏப்ரல் 1-ம் தேதி அமலுக்கு வர வேண்டிய கட்டண உயர்வு, தேர்தலையொட்டி இரண்டு மாதங்களுக்குப்பிறகு அமலுக்கு வருகிறது. இதனால் வாகன ஓட்டிகள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
+ There are no comments
Add yours