வெம்பக்கோட்டை அகழாய்வில் நாயக்கர் கால செம்புக் காசு கண்டெடுக்கப்பட்டுள்ளது.
விருதுநகர் மாவட்டம் வெம்பக்கோட்டை அருகே விஜய கரிசல்குளத்தில் கடந்த 5 ஆயிரம் ஆண்டு நுண் கற்காலத்தை அறியும் வகையில் வைப்பாற்றின் வடகரையில் அகழாய்வு பணிகள் நடைபெற்று வருகிறது.
ஏற்கனவே நடைபெற்ற இரண்டு கட்ட அகழாய்வில் 7914 தொல்லியல் பொருட்கள் கிடைக்கப்பட்டன. தொடர்ந்து மூன்றாம் கட்ட அகழாய்வு பணியை கடந்த ஜூன் மாதம் 18ஆம் தேதி தமிழ்நாடு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் காணொளி காட்சி மூலமாக தொடங்கி வைத்தார்.
மூன்றாம் கட்ட அகழாய்வு பணிகள் தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில், இன்று அகழாய்வில் நாயக்கர் கால செம்புக காசு கண்டெடுக்கப்பட்டுள்ளதாக நிதித்துறை மற்றும் தொல்லியல்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு எக்ஸ் தளத்தில் பதிவு செய்துள்ளார்.
+ There are no comments
Add yours