இந்த மாதம் 14ம் தேதியே கலைஞர் மகளிர் உரிமைத்தொகை வங்கி கணக்கில் செலுத்தப்படும்.. தமிழக அரசு!!

Spread the love

மாதம்தோறும் 15ஆம் தேதி வங்கி கணக்கில் கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம் பெறும் பயனாளர்களுக்கு, இந்த மாதம் 14ம் தேதியே ரூ.1000 வங்கி கணக்கில் வரவு வைக்கப்படும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.

முன்னதாக, கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் மாதம் ரூ.1,000 பெற்று பயன்பெறுவதற்காக 1 கோடியே 63 லட்சம் குடும்பத் தலைவிகள் விண்ணப்பித்திருந்த நிலையில், இதில் 1 கோடியே 6 லட்சத்து 50 ஆயிரம் பேர் இந்த திட்டத்தின் பயனாளர்களாக தேர்வு செய்யப்பட்டனர்.

அதனைத் தொடர்ந்து கடந்த மாதம் 15-ந் தேதி அண்ணா பிறந்த நாளில் தகுதிபெற்ற மகளிருக்கு மாதம் ரூ.1,000 வங்கி கணக்கில் செலுத்தும் நிகழ்ச்சியை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் காஞ்சிபுரத்தில் தொடங்கி வைத்தார்.

இதற்கிடையில், கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்திற்கான விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டவர்கள் மற்றும் ரூ.1,000 வங்கி கணக்கிற்கு வராத குடும்பத் தலைவிகள் ஆகியோர் இ-சேவை மையங்கள் மற்றும் கலைஞர் மகளிர் உதவி மையங்களில் மேல்முறையீடு செய்துள்ளனர்.

இந்த நிலையில், கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தில் பயன்பெற ஏற்கெனவே தேர்வான பயனாளிகளுக்கு இந்த மாதம் ஒருநாள் முன்கூட்டியே 14ம் தேதியே அவர்களுடைய வங்கிக்கணக்கில் ரூ. 1000 வரவு வைக்கப்படும் என தமிழக அரசு அறிவித்து உள்ளது.

இந்த மாதம் 15-ந்தேதி ஞாயிற்றுக்கிழமை என்பதால், ஒருநாள் முன்கூட்டியே பயனாளிகளின் வங்கிக்கணக்கில் ரூ.1000 வரவு வைக்க தமிழக அரசு திட்டமிட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.


Spread the love

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours