சென்னை மெரினா கடற்கரை உழைப்பாளர் சிலை அருகே தமிழக அரசின் சார்பில் குடியரசு தின விழா நடைபெறுகிறது. அன்றைய தினம் சிறப்பு அணிவகுப்பு நடத்தப்படும். கவர்னர் ஆர்.என்.ரவி தேசிய கொடியை ஏற்றி வைக்கிறார்.
போலீசார் தீவிர கண்காணிப்பு
குடியரசு தின விழா வர உள்ளதையொட்டி நாடு முழுவதும் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. ரயில் மற்றும் பேருந்து நிலையங்கள், கோவில்கள், கிறிஸ்தவ ஆலயங்கள், மசூதிகள், வணிக வளாகங்கள் உள்பட மக்கள் அதிகம் கூடும் இடங்களில் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகிறார்கள். மக்கள் கூடும் இடங்கள் அனைத்திலும் மெட்டல் டிடெக்டர் உதவியுடன் சோதனை நடத்தப்படுகிறது.
10 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு
ரயில் நிலையங்களில் ரயில்வே போலீசாரும், ரயில்வே பாதுகாப்பு படையினரும் ரோந்து சென்று கண்காணிக்கின்றனர். சென்னையை பொறுத்தவரை மாநகர் முழுவதும் 10 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
போலீசார் சோதனை
முன்னதாக மெரினா கடற்கரை காமராஜர் சாலையில் 2 வாரங்களுக்கு முன்பு இருந்தே போலீசார் கண்காணித்து வருகிறார்கள். கோயம்பேடு மார்க்கெட் மற்றும் பேருந்து நிலைய பகுதிகளிலும் போலீசார் சோதனை மற்றும் கண்காணிப்பை தீவிரப்படுத்திள்ளனர்.
விடுதிகளில் சோதனை
மேலும் இரவு நேரங்களில் தங்கும் விடுதிகள், லாட்ஜுகளில் சோதனை நடத்தப்பட்டு வருகிறது. சந்தேக நபர்கள் யாராவது தங்கி இருக்கிறார்களா? என்பது பற்றி ஆய்வும் செய்யப்பட்டு வருகிறது.
+ There are no comments
Add yours