சமையல் எரிவாயு விலை குறைந்தது !

Spread the love

Eligible families will be provided with free electricity up to 200 units and a gas cylinder for Rs 500, he said.
தகுதியுள்ள குடும்பங்களுக்கு 200 யூனிட்டுக்குள் இலவச மின்சாரமும், 500 ரூபாய்க்கு காஸ் சிலிண்டரும் வழங்கப்படும் என்று அவர் கூறினார்.

வணிக பயன்பாட்டிற்கான சமையல் எரிவாயு சிலிண்டர் விலையை எண்ணெய் நிறுவனங்கள் குறைத்துள்ளன.

சர்வதே சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலைக்கேற்ப பெட்ரோல், டீசல் விலையை நிர்ணையித்துக் கொள்ள எண்ணெய் நிறுவனங்களுக்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. இதன்படி ஒவ்வொரு மாதமும் சர்வதேச சந்தை நிலரத்திற்கேற்ப இந்த விலை நிர்ணயம் செய்யப்படுகிறது.

அந்த வகையில் எண்ணெய் நிறுவனங்கள் இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, சென்னையில் வணிகப் பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை குறைந்துள்ளது. 19 கிலோ எடை கொண்ட வணிக பயன்பாடு சிலிண்டர் விலை ரூ.70.50 குறைந்து ரூ.1,840.50 ஆக விற்பனை செய்யப்படுகிறது.

கடந்த மே 1-ம் தேதி 19 கிலோ எடை கொண்ட சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை ரூ.1, 911க்கு விற்பனை செய்யப்பட்டது. இந்த நிலையில் இன்று முதல் மேலும் ரூபாய் 70.50 குறைந்து தற்போது, 1,840.50 ரூபாய்க்கு விற்பனையாகிறது.

அதே நேரத்தில் வீட்டு பயன்பாட்டுக்காக சிலிண்டர் விலையில் எந்த மாற்றமும் அறிவிக்கப்படவில்லை. இதனால் 14 கிலோ எடை கொண்ட வீட்டு உபயோக சிலிண்டர் ரூ. 818.50க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.


Spread the love

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours