இளையராஜா வாழ்க்கை படம் துவக்கம்: தனுஷ் நடிக்க, அருண் மாதேஸ்வரன் இயக்குகிறார்
இளையராஜாவின் வாழ்க்கை கதையில் உருவாகும் படத்தில் அவரது வேடத்தில் தனுஷ் நடிக்க, அருண் மாதேஸ்வரன் இயக்குகிறார். இளையராஜாவே இசையமைக்கிறார்.
படத்தின் அறிமுக விழா மற்றும் பூஜை சென்னையில் நடந்தது.
‛அன்னக்கிளி’ படத்தில் அறிமுகமாகி இசை உலகின் ராஜா என பெயர் எடுத்தவர் ‛இசைஞானி’ இளையராஜா. 1400 படங்களுக்கு மேல் இசையமைத்துள்ள இவர் இன்றும் பல படங்களுக்கு பிஸியாக இசையமைத்து வருகிறார்.
படத்தின் துவக்க விழாவில் தனுஷ், அருண் மாதேஸ்வரன் தவிர்த்து இளையராஜா, கமல்ஹாசன், கங்கை அமரன், சந்தானபாரதி, ஆர்வி உதயகுமார், வெற்றிமாறன் உள்ளிட்ட பல திரைப்பிரபலங்களும் பங்கேற்றனர். ஆகஸ்ட் முதல் படப்பிடிப்பு துவங்குகிறது.
+ There are no comments
Add yours