உடல்நலகுறைவால் ஒய்வு எடுக்கப்போகும் பிரபாஸ்!

Spread the love

உடல்நலக் குறைவால் நடிகர் பிரபாஸ் சினிமாவில் இருந்து சிறிது காலம் ஒய்வு எடுக்கப் போகிறார் என்ற தகவல் பரவி வருகிறது.

தெலுங்கில் முன்னணி நடிகராக வலம் வருகிறார் நடிகர் பிரபாஸ். ‘பாகுபலி’ படத்தின் வெற்றிக்குப் பிறகு தொடர்ச்சியாக ‘ராதே ஷ்யாம்’, ‘ஆதிபுருஷ்’, ‘சாஹே’ என பான் இந்தியா படங்களாக நடித்து வந்தார். இந்தப் படங்கள் அனைத்துமே விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் தோல்வியைத் தழுவியது. மேலும், பிரபாஸ் இன்னும் நன்றாக நடிக்க வேண்டும் எனவும் சில ரசிகர்கள் விமர்சனம் கொடுத்தனர். இருந்தாலும் அடுத்தடுத்து பான் இந்தியா கதைகளிலேயே விரும்பி ஒப்பந்தமானார் பிரபாஸ். சமீபத்தில் வெளியான அவரது ‘சலார்’ படமும் தோல்வியைத் தழுவியது.

இவர் தற்போது ‘கல்கி’ படத்தில் ஒப்பந்தமானார். இதில் தனக்கான போர்ஷனையும் பிரபாஸ் முடித்துள்ளார். இதற்கடுத்து, மாருதி இயக்கத்தில் ‘ராஜாசாப்’ படத்தில் நடிப்பார் என எதிர்பார்க்கப்பட்டது. அதே போல் அனிமல் பட இயக்குநர் சந்தீப் ரெட்டி வங்கா இயக்கத்தில் ‘ஸ்பிரிட்’ என்கிற படத்திலும் கமிட் ஆகி உள்ளார். மேலும், ‘சலார்2’ படமும் உருவாக இருப்பதாக சொல்லப்படுகிறது.

இதுபோன்ற சூழ்நிலையில்தான், பிரபாஸ் சினிமாவுக்கு பிரேக் எடுக்கப் போகிறார் எனச் சொல்லப்படுகிறது. சமீபத்தில் பிரபாஸுக்கு முழங்காலில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. அதனால் ஏற்பட்ட வலி இன்னும் சரியாகாத நிலையில், அவர் தொடர்ந்து அவதிப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. இதனாலேயே இந்த முடிவு எனவும் சொல்கின்றனர். விரைவில் பிரபாஸ் இதுகுறித்து உறுதிப்படுத்துவார் என சொல்லப்படுகிறது.


Spread the love

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours