சென்னை: ‘லவ் டுடே’ படம் மூலம்பிரபலமான பிரதீப் ரங்கநாதன், தற்போது விக்னேஷ் சிவன் இயக்கும் ‘எல்.ஐ.சி’ படத்தில் நடித்து வருகிறார். இதன் படப்பிடிப்பு நடந்துகொண்டிருக்கிறது. இதையடுத்து அவர் நடிக்கும் நடிக்கும் புதிய படத்தை, அசோக் செல்வன், விஜய் சேதுபதி, ரித்திகா சிங் நடித்த ‘ஓ மை கடவுளே’ படத்தை இயக்கிய அஸ்வத் மாரிமுத்து இயக்குகிறார்.
இந்தப் படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் சார்பில் கல்பாத்தி அகோரம், கல்பாத்தி எஸ்.கணேஷ், கல்பாத்தி சுரேஷ் தயாரிக்கின்றனர். கிரியேட்டிவ் தயாரிப்பாளராக அர்ச்சனா கல்பாத்தி இருக்கிறார். இந்தப் படத்தின் டைட்டிலை படக்குழு நேற்று வெளியிட்டுள்ளது. படத்துக்கு ‘டிராகன்’ என்று தலைப்பு வைத்துள்ளனர்.
+ There are no comments
Add yours