ரசிகர்கள் எளிதில் மறக்க முடியாத நடிகை வேதிகா.’காளை’, ‘முனி’, ‘பரதேசி’ போன்ற படங்களின் மூலம் சிறந்த நடிகை என்று பெயரெடுத்தவர்.தற்போது தமிழ், தெலுங்கு, மலையாளம் உட்பட பல மொழிகளில் பிஸியாக இருக்கிறார்.
தமிழில் பிரபுதேவாவுடன் ‘பேட்ட ராப்’, கதையின் நாயகியாக ‘மஹால்’ ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.தெலுங்கில் முன்னணி நிறுவனம் தயாரிக்கும் வெப் சிரீஸில் டைட்டில் ரோலில் நடித்து வருகிறார். இந்த வெப் சிரீஸை முன்னணி ஒ.டி.டி.நிறுவனம் தயாரிக்கிறது.மேலும் தமிழ் மற்றும் கன்னடத்தில் தயாராகி வரும் ‘கானா’ படத்திலும் நடித்துள்ளார். பான் இந்தியா நடிகையாக அனைத்து மொழிகளிலும் தனக்கான இடத்தை தக்கவைத்துக் கொண்டிருக்கும் வேதிகா பான் இந்தியா சீசனில் மீண்டும் தன் ஆட்டத்தை அதிரடியாக தொடங்கியுள்ளார்.
+ There are no comments
Add yours