கங்குவா படத்தின் புதிய போஸ்டர் வெளியீடு !

Spread the love

சூர்யாவின் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் கங்குவா படம் குறித்து படுக்குழு தற்போது சிறப்பான தரமானNew Poster அப்டேட் ஒன்றை வெளியிட்டுள்ளது 

தமிழ் சினிமாவில் இருக்கும் மாஸ் நடிகர்களுள் ஒருவராக வலம் வரும் நடிகர் சூர்யா சமீப காலமாக இளம்தலைமுறைகளுக்கு தேவையான பல நல்ல கருத்துக்கள் கொண்ட கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார் அந்தவகையில் நடிகர் சூர்யாவின் நடிப்பில் தற்போது முழுவீச்சில் உருவாகி வரும் வரலாற்று திரைப்படம் தான்கங்குவா.

ஸ்டுடியோ கிரீன் மற்றும் யுவி கிரியேஷன்ஸ் இணைந்து மிக பெரிய பொருட்செலவில் தயாரித்து வரும் இப்படத்தைசிறுத்தை சிவா இயக்க தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்து வருகிறார். ரசிகர்களின் மிக பெரிய எதிர்பார்ப்புக்கிடையேஉருவாகி வரும் இப்படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக பாலிவுட் நடிகை திஷா பதானி நடிக்கிறார்.

இவர்களுடன் சேர்ந்து கோவை சரளாயோகி பாபுரெடின் கிங்ஸ்லிஆனந்தராஜ்ரவி ராகவேந்திராகே.எஸ்.ரவிக்குமார் மற்றும் பி.எஸ்.அவினாஷ் உள்ளிட்ட முன்னணி நடிகர்கள் முக்கிய கதாபாத்திரங்களில்நடிக்கின்றனர் .

வரலாற்று சிறப்புமிக்க ஆக்சன் படமாக உருவாகி வரும் கங்குவா உலகம் முழுவதும் சுமார் பத்து மொழிகளில்வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டது .

இதற்கிடையில் கடந்த சில மாதங்களுக்கு முன் இப்படத்தின் மாஸான கிலிம்ப்ஸ் வீடியோவை படக்குழுவெளியிட்டிருந்தது.

இந்த நிலையில் இந்த படத்தின் புதிய போஸ்டர் ஒன்றை படக்குழுவினர் வெளியிட்டு செம அப்டேட் ஒன்றையும்கூறியுள்ளனர்.

நாளை காலை 11 மணிக்கு உதிரன் என்ற கேரக்டரின் போஸ்டர் வெளியாகும் என்று படக்குழு அறிவித்துள்ளனர்.

உதிரம் உள்ள கைகளுடன் உதிரன் இருக்கும் போஸ்டரையும் வெளியிட்ட நிலையில் இந்த New Poster தற்போதுஇணையத்தில் செம வைரல் ஆகி வருகிறது.

ரசிகர்களின் மிக பெரிய எதிர்பார்ப்புக்கிடையே உருவாகி வரும் இப்படத்தில் நடிகர் சூர்யா சுமார் 10 கெட்டப்புகளில் நடித்து உள்ளதாக ஒரு தகவல் அரசால் புரசலாக கிடைத்துள்ளது.

ஒரு வேலை அது உண்மையாக இருந்து சூர்யா 10 கெட்டப்புகளில் கெத்து காட்டினால் எப்படி இருக்கும் என்பதைகமெண்டில் எங்களுக்கு தெரியப்படுத்துங்கள்.


Spread the love

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours