பணம் கேட்டு தனது மகளை முனீஸ்ராஜா தினமும் அடித்து உதைத்து சித்ரவதை செய்துள்ளதாக நடிகர் ராஜ்கிரண் வேதனை தெரிவித்துள்ளார்.
ராஜ்கிரணின் வளர்ப்பு மகளான ஜீனத் பிரியா இவர் நாதஸ்வரம் சீரியலில் நடித்து பிரபலமான முனிஷ் ராஜாவை 2022-ஆம் ஆண்டு காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
முனிஷ் ராஜாவின் குடும்பம் குறித்து விசாரித்த ராஜ்கிரண் இதற்கு எதிர்ப்புத் தெரிவித்தார். ஆனால் ராஜ்கிரணின் எதிர்ப்பை மீறி, காதலனைத் திருமணம் செய்து கொண்டார்.
இந்த நிலையில் முனிஷ் ராஜாவை பிரிந்து விட்டதாக ஜீனத் பிரியா, கண்ணீருடன் வீடியோ வெளியிட்டுள்ளார்.
அதில், என்னை வளர்த்த அப்பாவை கஷ்டப்படுத்தி இருக்கிறேன். மன்னிச்சிருங்க டாடி என்று கைகூப்பி அந்த வீடியோவில் பேசியிருக்கிறார்.
இந்த நிலையில், பணம் கேட்டு தனது மகளை முனீஸ்ராஜா தினமும் அடித்து உதைத்து சித்ரவதை செய்துள்ளதாக நடிகர் ராஜ்கிரண் வேதனை தெரிவித்துள்ளார்.
இது குறித்து செய்தி நிறுவனம் ஒன்றிற்கு பேட்டி அளித்த அவர்,
பணக்கார குடும்பங்களை குறிவைத்து பணம் பறிப்பது தான் முனீஸ்ராஜா மற்றும் அவனது குடும்பத்தாரின் வேலை.
இதற்காக கொல்லிமலை பக்கம் போய் வசியம் செய்யப்பட்ட மருந்து வாங்கி அதை சம்பந்தப்பட்ட பெண்களை சாப்பிட வைத்துவிடுகிறார்கள்.
அதன்பின் அவர்கள் சொல்வதையே அந்த பெண்களையும் கேட்க வைத்து விடுவார்கள். இப்படி ஏழெட்டு பெண்களிடம் அந்த குடும்பமே பணம் பறித்துள்ளது.
இதையெல்லாம் தெரியாமல் என் பொண்ணு போய் மாட்டிக் கொண்டது. அந்த பையனை பிரிந்து 5 மாதம் ஆகிவிட்டது. இப்போ என் பெண்ணை நான் தான் தனியாக வீடு எடுத்து தங்க வைத்து பார்த்து கொள்கிறேன்.
பணம் வாங்கிட்டு வா என டார்ச்சர் செய்வது, அடிப்பது என்று இருந்துள்ளான்.
அவன் நல்லபடியாக வாழ வைக்கவில்லை. ஆறேழு மாதத்தில் என் மகள் பிரிந்து வந்துவிட்டார்.
முனீஸ்ராஜாதினமும் குடித்துவிட்டு அடிப்பது, கொடுமைப்படுத்துவது என எல்லா டார்ச்சரும் செய்துள்ளான். அவன் மட்டுமல்ல அவன் குடும்பமே இதற்கு உடந்தை.
தினமும் குடித்துவிட்டு வந்து அடித்ததால் உடல்ரீதியாக என் மகள் பாதிக்கப்பட்டார்.
இதயத்தில் பாதிப்பு ஏற்பட்டு ரத்த வாந்தி எடுக்கும் அளவுக்கு சித்ரவதை அனுபவித்துள்ளார்.
இந்த விஷயம் எனக்கு முதலில் தெரியாது. பின்னர் வேறு ஒருவர் மூலம் தெரியவர ஆஸ்பத்திரியில் சேர்த்து சிகிச்சை அளித்தேன்.
பிரிந்து வந்த பின்னர் முனீஸ்ராஜா மீண்டும் என் மகளுடன் வாழ பேசி உள்ளார். ஏற்கனவே முனீஸ்ராஜா நிறைய திருமணம் செய்துள்ளான்.
அந்த விஷயம் எல்லாம் என் மகளுக்கு தெரியவர அவர் தெளிவாக பதில் அளித்துவிட்டார். தற்போது என் மகள் மன ரீதியாகவும் பாதிப்பில் உள்ளார். சிகிச்சை எடுத்து வருகிறார் என ராஜ்கிரண் தெரிவித்துள்ளார்.
+ There are no comments
Add yours