சென்னை போயஸ் கார்டனில் ஜெயலலிதா இல்லம் என்ற பெயரில் சசிகலா புதிதாக வீடு கட்டியுள்ளார். கிரகப்பிரவேசம் முடிந்த நிலையில், இன்று சசிகலா வீட்டிற்கு நடிகர் ரஜினிகாந்த் சென்றார்.
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா சென்னை போயஸ்கார்டனில் உள்ள வேதா நிலைய இல்லத்தில் வசித்துவந்தார். ஜெயலலிதாவுடன் அவரது தோழி சசிகலாவும் போயஸ் கார்டன் வீட்டில் வசித்து வந்தார். இந்த நிலையில், கடந்த 2017 ஆம் ஆண்டு ஜெயலலிதா மீதான வருமானத்திற்கு அதிகமாக சொத்து குவித்த வழக்கில் சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோருக் 4 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது.
இதனால் கடந்த 2017 ஆம் ஆண்டு பரப்பன அக்ரஹார சிறையில் இவர்கள் மூவரும் அடைக்கப்பட்டனர். இதையடுத்து 2020 ஆம் ஆண்டு சசிகலா சிறையிலிருந்து விடுதலை ஆனார். அப்போது முதல் அதிமுகவைகைப்பற்றும் முயற்சிகளில் ஈடுபட்டு வருகிறார். அதிமுகவில் அனைவரையும் ஒருங்கிணைப்பேன் என்று சசிகலா கூறிவருகிறார்.
கடந்த சில வாரங்களுக்கு முன்பாக நீலகிரி மாவட்டத்தில் உள்ள ஜெயலலிதாவுக்கு சொந்தமான கொடநாடுஎஸ்டேட்டிற்கு சசிகலா சென்றார். அங்கு ஜெயலலிதாவின் சிலைக்கு மரியாதை செலுத்தினார். பின்னர் அங்குகட்டப்படும் நினைவிடத்திற்கும் அவர் அடிக்கல் நட்டியிருந்தார். இதற்கிடையே, சென்னையில் போயஸ் கார்டனில்வேதா நிலைய இல்லத்திற்கு எதிரே சசிகலா வீடு கட்டி குடியேற திட்டமிட்டார்.
+ There are no comments
Add yours