துபாயில் மகளின் பிறந்தநாளை கொண்டாடிய அஜித்!

Spread the love

மகளின் பிறந்தநாளை துபாயில் பிரம்மாண்டமாக கொண்டாடியுள்ள நடிகர் அஜித் மற்றும் அவரது குடும்பத்தின் புகைப்படங்கள் தற்போது செம வைரல் ஆகி வருகிறது.

தமிழ் சினிமாவில் இருக்கும் உச்ச நட்சத்திரங்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர். உலகம் முழுவதும் எண்ணற்ற ரசிகர்கள் பட்டாளத்தை வைத்திருக்கும் இவரது நடிப்பில் தற்போது வேற லெவலில் உருவாகி வரும் படம் தான் விடாமுயற்சி. இயக்குநர் மகிழ் திருமேனியின் இயக்கத்தில் நடிகர் அஜித் நடித்து வரும் இப்படத்தை லைக்கா நிறுவனம் பிரம்மாண்ட பொருட் செலவில் தயாரித்து வருகிறது. பல இளம் நடிகர்கள் ஒன்று கூடி நடித்து வரும் இப்படத்தில் அஜித்துக்கு ஜோடியாக திரிஷா நடிக்கிறார். அனிரூத் இசையமைக்க இருக்கும் இப்படம் முழுக்க முழுக்க அஜர்பைஜான் நாட்டில் விறுவிறுப்பாக எடுக்கப்பட்டு வருகிறது .

இதற்காக நடிகர் நடிகைகள் சிறு சிறு இடைவெளிகளை எடுத்துக்கொண்டு மீண்டும் படப்பிடிப்புக்கு சென்று வருகின்றனர். அந்தவகையில் தற்போது தனக்கு கிடைத்த இடைவெளியில் நடிகர் அஜித் தற்போது குடும்பத்துடன் துபாய்க்கு வந்து நேரத்தை செலவிடுகிறார். குடும்பத்துடன் மகிழ்ச்சியாக நேரத்தை செலவிடும் வீடியோக்கள் மற்றும் புகைப்படங்கள் வெளிவந்து வழக்கம் போல் செம வைரல் ஆகி கொண்டிருக்கிறது.

இந்நிலையில் தற்போது நடிகர் அஜித் தனது மகள் அனோஷ்காவின் பிறந்தநாளை குடும்பத்துடன் சேர்ந்து கோலாகலமாக கொண்டாடி இருக்கு புகைப்படமே தற்போது இணையத்தில் வெளியாகி செம வைரல் ஆகி இருக்கிறது.

இதற்கு முன் 2024 ஆம் ஆண்டு புத்தாண்டை அஜித் துபாயில் கொண்டாடிய வீடியோக்கள் மற்றும் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாக வலம் வந்தது குறிப்பிடத்தக்கது.

ஏற்கனவே பல கட்ட படப்பிடிப்பு முடிக்கப்பட்டுள்ள நிலையில் அஜித்தின் விடாமுயற்சி குறித்த படத்தின் அப்டேட்டுகள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது


Spread the love

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours