இயக்குநர் சுதா கொங்கரா புதிய கதை ஒன்றை நடிகர் துருவ் விக்ரமிற்கு சொல்லி இருக்கிறார். விரைவில் இந்தப் படத்தின் வேலைகள் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
’இறுதிச்சுற்று’, ’சூரரைப் போற்று’ படங்கள் மூலம் தமிழ்த் திரையுலகைத் திரும்பி பார்க்க வைத்தவர் இயக்குநர் சுதா கொங்கரா. ஆனால், ‘சூரரைப் போற்று’ படம் வெளியாகி நான்கு ஆண்டுகள் ஆகியும் பெரிய திரையில் அவர் படங்கள் எதுவும் இயக்கவில்லை. சூர்யாவுடன் மீண்டும் அவர் இணையும் ‘புறநானூறு’ படம் அறிவிக்கப்பட்ட போதும் கதைக்கு இன்னும் காலம் ஆகும் என்பதால் அதன் படப்பிடிப்பு தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.
இதையடுத்து, சூர்யா ரசிகர்கள் படம் கைவிடப்பட்டதா என்றும் இணையத்தில் கேள்வி எழுப்பி வருகின்றனர். இப்படியான சூழ்நிலையில்தான் சுதா கொங்கரா துருவ் விக்ரமுக்கு புதிய கதை ஒன்றை சொல்லியுள்ளார். இதற்கான பேச்சுவார்த்தை முடிந்திருந்தாலும் இன்னும் துருவ் விக்ரம் படத்தை உறுதி செய்யவில்லை என்று தெரிகிறது.
துருவ் விக்ரம் தற்போது மாரி செல்வராஜ் இயக்கத்தில் கபடி வீரராக புதிய படம் ஒன்றில் நடித்து வருகிறார். சுதா கொங்கரா கதையை உறுதி செய்தால் மாரி செல்வராஜ் படத்திற்கு அடுத்து இதில் நடிப்பார் என எதிர்பார்க்கலாம்.
சூர்யா படத்திற்கான கதையை தயார் செய்வதற்கு முன்னரே சுதா, துருவ் விக்ரம் படத்தில் இணைந்தால் அப்போது ‘ ‘புறநானூறு’ படம் கைவிடப்பட்டது என்று கேள்விப்பட்ட செய்தி உண்மைதானா?’ என்று அப்செட்டாகி கேட்டு வருகின்றனர் சூர்யா ரசிகர்கள்.
+ There are no comments
Add yours