நடிகர் மன்சூர் அலிகான் மீது 2 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், விசாரணைக்கு ஆஜராக போலீசார் சம்மன் அனுப்பியுள்ளனர்.
கடந்த சில நாட்களுக்கு முன்பதாக, நடிகர் மன்சூர் அலிகான் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்திருந்தார். அப்போது அவர் பேசிய கருத்துக்கள் சர்ச்சையாகியுள்ளது. அவர் அளித்திருந்த பேட்டியில், ஆரம்ப காலகட்டத்தில் படங்களில் நடிக்க கூப்பிட்டால் கதாநாயகியை ரேப் செய்வது போல காட்சிகள் இருக்கும்.
அதைப்போலவே, லியோ படத்தில் லோகேஷ் அழைத்தவுடன் நடிகை திரிஷா என்றவுடன் அதுபோல காட்சி இருக்கும் என நினைத்தேன் ஆனால் அப்படி இல்லை என தெரிவித்திருந்தார்.
நடிகர் மன்சூர் அலிகானின் பேச்சு பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்திய நிலையில், இவரது பேச்சுக்கு கண்டனங்களும் வலுத்து வருகிறது. இதனை தொடர்ந்து, தேசிய மகளிர் ஆணையம் தாமாக முன்வந்து மன்சூர் அலிகான் மீது சட்டப்பிரிவு 509ன் கீழ் மற்றும் இதர தொடர்புடைய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யவேண்டும் என உத்தரவு பிறப்பித்துள்ளது.
இந்த நிலையில், நடிகர் மன்சூர் அலிகான் மீது பேச்சு, செயல் மூலம் பெண்களிடம் பாலியல் துன்புறுத்தலில் ஈடுபடுதல் (IPC 354 a), பெண்களை அவமதிக்கும் விதத்தில் பேசுவது (IPC 509) ஆகிய 2 பிரிவுகள் கீழ் ஆயிரம் விளக்கு போலீசார் வழக்கு பதிந்துள்ளனர்.
நடிகர் மன்சூர் அலிகான் மீது 2 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், விசாரணைக்கு ஆஜராக நடிகர் மன்சூர் அலிகானுக்கு போலீசார் சம்மன் அளிக்கப்பட்டுள்ளது.
+ There are no comments
Add yours