ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை திரைப்படத்துறையில் இயங்கும் பெண்கள் மீது சுமத்தாதீர்கள் என நடிகை த்ரிஷா குறித்த அவதூறு பேச்சுக்கு பெப்சி கண்டனம் தெரிவித்துள்ளது.
த்ரிஷா குறித்து அவதூறாக பேசிய அதிமுக முன்னாள் ஒன்றிய செயலாளர் ஏ.வி.ராஜூக்கு பெப்சி அமைப்பு தனது கண்டனத்தை தெரிவித்துள்ளது.
இதற்காக அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘அரசியலில் ஒருவரை ஒருவர் தாக்கி கொள்வதற்கு பல்வேறு காரணங்கள் இருக்கலாம். ஆனால், உங்கள் அரசியல் பிரச்சினைகளில் தேவையில்லாமல் ஆதாரம் அற்ற குற்றச்சாட்டுகளையும், கீழ்த்தரமான அவதூறுகளையும் திரைப்படத்துறையில் இயங்கும் பெண்கள் மீது சுமத்தாதீர்கள். இதனை வன்மையாகக் கண்டிக்கிறோம். இம்மாதிரியான அவதூறு தாக்குதலை இரும்புக்கரம் கொண்டு களைய வேண்டும் என மத்திய, மாநில அரசுகளை வேண்டுகிறோம்’ எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
கவனம் ஈர்பதற்காக எந்த அளவுக்கும் தரம் தாழ்ந்து பேசும் நபர்களை பார்ப்பதற்கே அருவருப்பாக இருப்பதாக நடிகை த்ரிஷா வேதனை தெரிவித்துள்ளார்.
கூவத்தூர் விவகாரத்தில் நடிகை த்ரிஷா மற்றும் கருணாஸை தொடர்புபடுத்தி அதிமுக முன்னாள் நிர்வாகி ஏ.வி.ராஜு சர்ச்சைக்குரிய கருத்துகளை தெரிவித்திருந்தார். இந்த விவகாரம் அரசியல் அரங்கிலும், திரைத்துறையினர் மத்தியிலும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இது தொடர்பாக பல்வேறு தரப்பினருக்கும் முன்னாள் அதிமுக பிரமுகர் ராஜூக்கு தங்களது கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர். இந்த விவகாரம் பூதாகரமானதை அடுத்து ஏ.வி. ராஜூ மன்னிப்புக் கோரியுள்ளார்.
+ There are no comments
Add yours