நடிகர் சாந்தனுவும் அவரது மனைவி கிகியும் (கீர்த்தி) வெளிநாட்டில் சாலையில் ‘வாடி வாடி நாட்டுக்கட்ட…’ பாடலுக்கு நடனம் ஆடியுள்ளனர். இந்த வீடியோ ரசிகர்கள் மத்தியில் வைரலாகியுள்ளது.
நடிகர் சாந்தனுவும் அவரது மனைவி, தொகுப்பாளினி கீர்த்தியும் அடிக்கடி வெளிநாடு சுற்றுலா செல்வதுண்டு. அப்படி தாய்லாந்திற்கு ஜோடியாக இருவரும் சென்ற போது அங்கு மக்கள் நடமாட்டம் இருக்கும் சாலையில் ‘வாடி…வாடி நாட்டுக்கட்ட…’ பாடலுக்கு உற்சாகமாக நடனம் ஆடியுள்ளனர். இந்த வீடியோவை தங்களது சமூக வலைதளங்களில் பகிர்ந்து, ‘நாங்க எங்க விட்டாலும் ஆடுவோம்…’ என சொல்லி உள்ளனர்.
இவர்களின் இந்த ஜாலி வீடியோ இணையத்தில் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. நடிகர் பாக்யராஜின் மகனான சாந்தனு ‘சக்கரக்கட்டி’ படம் மூலம் அறிமுகமானார். சினிமாவில் வெற்றிக்காக தொடர்ந்து போராடி வந்தார்.
இயக்குநர் ரஞ்சித் தயாரிப்பில் வெளிவந்த ‘ப்ளூ ஸ்டார்’ படம் அவருக்கு நல்ல பெயரை வாங்கித் தந்தது. இதற்கடுத்து நல்ல படக் கதைகளில் கவனம் செலுத்தி வருகிறார். அவரது மனைவி கிகி நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்குவது, நடனம் என பிஸியாக இருக்கிறார்.
இந்த ஜோடி இணைந்து யூடியூப் சேனல் ஒன்றையும் நடத்தி வருகிறது. அதில் தங்களது செல்ல சண்டைகள், டிரிப் செல்லும் வீடியோ ஆகியவற்றைப் பகிர்ந்து வருகின்றனர். இந்த ஜோடிக்கு திருமணம் ஆகி எட்டு வருடங்கள் கடந்தாலும் இன்னும் குழந்தை இல்லை. இந்த கேள்வியை எதிர்கொள்ளும் போது ”‘எங்கள் வாழ்க்கையை நாங்கள் பார்த்துக் கொள்கிறோம்’ என்று சொல்லி விடுவேன்” என கிகி சொன்னார்.
+ There are no comments
Add yours