இராதாகிருஷ்ணன் பார்த்திபனின் புதிய சாகச திரில்லர் திரைப்படம் ‘டீன்ஸ்’ டிரெய்லர் மற்றும் இசை புதுமையான முறையில் வெளியீடு.
திரையரங்கில் நான்கு காட்சிகளாக இசை வெளியிடப்பட்டு புதிய உலக சாதனை, டிரெய்லரை இயக்குநர் மணிரத்னம் வெளியிட்டார்.
பல்வேறு துறைகளில் சாதனை புரிந்த 13 இளம் வயதினருக்கு பாராட்டு தெரிவித்த ‘டீன்ஸ்’ படக்குழு.
உலகிலேயே முதல் முறையாக திரையரங்குகளில் தணிக்கை சான்றிதழ் உடன் முதல் பார்வை வெளியிடப்பட்டு சாதனை படைத்த இராதாகிருஷ்ணன் பார்த்திபனின் முற்றிலும் மாறுபட்ட, குழந்தைகளை மையமாகக் கொண்ட சாகச திரில்லரான ‘டீன்ஸ்’ திரைப்படத்தின் இசை மற்றும் டிரெய்லர் சென்னையில் சனிக்கிழமை அன்று வெளியிடப்பட்டது.
டிரெய்லரை இயக்குநர் மணிரத்னம் வெளியிட்ட நிலையில், ‘டீன்ஸ்’ திரைப்படத்தின் இசை சென்னை கமலா திரையரங்கில் நான்கு காட்சிகளாக தொடர்ந்து வெளியிடப்பட்டு புதிய உலக சாதனையை படைத்துள்ளது.
இதை தொடர்ந்து, ஒரே நாளில் ஒரே இடத்தில் அதிக இசை வெளியீட்டு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்ட படம் என்பதற்கான சான்றிதழ் ‘டீன்ஸ்’ திரைப்படத்திற்கு உலக சாதனைகள் சங்கத்தால் வழங்கப்பட்டது.
இத்திரைப்படத்திற்காக இசை அமைப்பாளர் D. இமான் மற்றும் ஒளிப்பதிவாளர் காவ்மிக் ஆரி ஆகியோருடன் முதல் முறையாக இராதாகிருஷ்ணன் பார்த்திபன் இணைந்துள்ளார். ஆர். சுதர்சன் படத்தொகுப்பை கையாண்டுள்ளார்.
‘டீன்ஸ்’ இசை வெளியீட்டு விழாவின் முக்கிய அம்சங்கள் வருமாறு…
அரசியல் தமிழகம் சினிமா இந்தியா உலகம் விளையாட்டு கல்வி சிறப்பு கட்டுரை வைரல் செய்திகள்

பதிமூன்று குழந்தைகளை மையமாகக் கொண்ட கதை என்பதால் பல்வேறு துறைகளில் சாதனை புரிந்த 13 இளம் வயதினருக்கு நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியில் ‘டீன்ஸ்’ படக்குழு நேரில் பாராட்டு தெரிவித்தது.
கால்டுவெல் வேள்நம்பி, டாக்டர் பாலசுவாமிநாதன், டாக்டர் பின்ச்சி ஸ்ரீநிவாசன், ரஞ்சித் தண்டபாணி மற்றும் இராதாகிருஷ்ணன் பார்த்திபன் ஆகியோர் இப்படத்தை தயாரித்துள்ளனர்.
பயாஸ்கோப் டிரீம்ஸ் எல் எல் பி மற்றும் அகிரா ப்ரொடக்ஷன்ஸ் பேனரில் ‘டீன்ஸ்’ தயாராகியுள்ளது. கீர்த்தனா பார்த்திபன் அக்கினேனி இதன் கிரியேட்டிவ் தயாரிப்பாளர் ஆவார்.
விரைவில் வெளியாகியுள்ள ‘டீன்ஸ்’ திரைப்படத்தை தமிழகம் எங்கும் உள்ள திரையரங்குகளில் (கோயம்புத்தூர் தவிர) சக்திவேலனின் சக்தி பிலிம் பேக்டரி வெளியிடுகிறது, கோயம்புத்தூர் வெளியீட்டு உரிமையை எல்மா பிக்சர்ஸ் என். எத்தில்ராஜ் பெற்றுள்ளார்.
இத்திரைப்படத்திற்காக இசை அமைப்பாளர் D. இமான் மற்றும் ஒளிப்பதிவாளர் காவ்மிக் ஆரி ஆகியோருடன் முதல் முறையாக இராதாகிருஷ்ணன் பார்த்திபன் இணைந்துள்ளார். ஆர். சுதர்சன் படத்தொகுப்பை கையாண்டுள்ளார்.
‘டீன்ஸ்’ இசை வெளியீட்டு விழாவின் முக்கிய அம்சங்கள் வருமாறு…
விழாவில் பாராட்டு பெற்ற 13 இளம் சாதனையாளர்களின் சார்பாக இசைக் கலைஞர் லிடியன் நாதஸ்வரம் பேசியதாவது…
“எங்களை இந்த நிகழ்ச்சிக்கு அழைத்து கௌரவித்த பார்த்திபன் அவர்களுக்கு மிக்க நன்றி. ‘டீன்ஸ்’ திரைப்படம் பற்றி கூற வேண்டும் என்றால் இது பார்த்திபனின் கனவு. அவரும் இசையமைப்பாளர் டி இமான் அவர்களும் முதல் முறையாக இணைந்துள்ளார்கள் பாடல்களை கேட்டேன், மிகவும் அருமையாக உள்ளன. உங்கள் அனைவரைப் போன்று நானும் இத்திரைப்படத்தை திரையரங்குகளில் காண ஆவலாக உள்ளேன்.”
நடிகை பூர்ணிமா பாக்யராஜ் பேசியதாவது…
“அனைத்தையும் புதுமையாக செய்பவர் பார்த்திபன். ‘டீன்ஸ்’ திரைப்படத்தையும் அவ்வாறே உருவாக்கியுள்ளார் எத்தனையோ புதிய திறமைகளை அவர் இப்படத்தின் மூலம் அறிமுகப்படுத்தியுள்ளார். இதன் டிரெய்லர் மற்றும் பாடல்கள் மிகவும் சிறப்பாக உள்ளன. பார்த்திபனுக்கும் அவரது குழுவினருக்கும் மனமார்ந்த வாழ்த்துகள்.”
‘டீன்ஸ்’ தயாரிப்பாளர்களில் ஒருவரான டாக்டர் பின்ச்சி ஸ்ரீநிவாசன் பேசியதாவது…
“நான் ஒரு குழந்தைகள் மருத்துவர். குழந்தைகளை மையப்படுத்திய ‘டீன்ஸ்’ திரைப்படத்தின் கதையை பார்த்திபன் எங்களிடம் சொல்லும் போதே நான்கு தயாரிப்பாளர்களுக்கும் மிகவும் பிடித்திருந்தது.
சொல்லப்போனால் பார்த்திபனே ஒரு டீன் ஏஜர் தான். இத்திரைப்படத்தில் 13 டீன் ஏஜர்கள் உடன் பணியாற்றியதால் அவர் இன்னும் இளமையாக, அவர்கள் அனைவரின் உற்சாகத்தையும் தன்னகத்தே கொண்டு திகழ்கிறார்.
இசையமைப்பாளர் இமான் மிக அருமையான பாடல்களை இத்திரைப்படத்திற்கு தந்துள்ளார். சிறுவர்கள் மட்டுமில்லாது அனைத்து தரப்பினரும் பார்த்து ரசிக்கக்கூடிய இத்திரைப்படம் அனைவரின் ஆதரவையும் பெற்று வெற்றி பெறும் என்று நம்புகிறேன்.”
+ There are no comments
Add yours