’பையா’ ரீ- ரிலீஸ் குறித்து சுவாரஸ்யமான தகவல்களை பகிர்ந்த லிங்குசாமி!

Spread the love

ஹிட் படங்களின் ரீ-ரிலீஸ் கலாச்சாரத்தில் இணைந்திருக்கிறது ‘பையா’ படம். இயக்குநர் லிங்குசாமி இயக்கத்தில் நடிகர்கள் கார்த்தி, தமன்னா நடிப்பில் கடந்த 2010-ல் வெளியான இந்தப் படம் புதிய டெக்னாலஜி அடிப்படையில் டிஜிட்டல் தொழில்நுட்பத்திற்கு மாற்றப்பட்டு ஏப்ரல் 11-ம் தேதி ரீ-ரிலீஸ் ஆகிறது. இந்த நிலையில், ’பையா’ ரீ- ரிலீஸ் குறித்து பல சுவாரஸ்யமான தகவல்களை இயக்குநர் லிங்குசாமி பகிர்ந்துள்ளார்.

இதுபற்றி லிங்குசாமி ஊடகபேட்டி ஒன்றில், “18 நாட்களில் ‘பையா’ திரைப்படத்தின் கதையை தயார் செய்தேன். ராமோஜிராவ் ஃபிலிம் சிட்டியில் ‘ஆயிரத்தில் ஒருவன்’ படத்தில் நடித்துக் கொண்டிருந்த கார்த்தியிடம் போய் இந்தக் கதையை கூறினேன். முதல் காட்சியில் சிரிக்க ஆரம்பித்தவர் முழு கதையையும் கேட்டு கலகலகவென்று சிரித்தபடி, ’இதை நாம் செய்வோம்’ என்று கூறினார்.

இந்த கதை உருவாகும்போதே ‘பையா’ என்கிற டைட்டிலும் கிடைத்து விட்டது. ’சண்டக்கோழி’ பட டைட்டில் அதன் கதை உருவாக்கும்போதே எனக்கு கண் முன்னாடி டைட்டில் கார்டில் போடுவது போல ஓடுகிறது. அதேபோல ’ரன்’ படத்திற்காக ‘பிடிச்சிருக்கா’ என்கிற டைட்டிலைத் தான் முதலில் தயாரிப்பாளர் ஏ.எம்.ரத்னத்திடம் கூறினேன். ஆனால், அவரோ சந்தேக தொனியுடன் இந்த டைட்டில் வேண்டாம் என்று சொல்லி அதற்கான காரணத்தையும் சொன்னார்.

அதாவது, ‘படம் பார்த்து விட்டு வெளியே வரும் போது பிடிச்சிருக்கா பிடிக்கலையா என அது ஒரு சர்ச்சையை ஏற்படுத்தும். இப்படித்தான் எஸ்.ஜே. சூர்யா ’குஷி’ படத்திற்கு ’முத்தம்’ என முதலில் டைட்டில் வைத்திருந்தார்.

யாராவது தியேட்டரில் டிக்கெட் எடுக்கும் போது முத்தம் இரண்டு கொடுங்கள் எனக்கு கேட்பார்களா? பெண்கள் எப்படி வந்து டிக்கெட் கேட்பார்கள் ? அதனால் டைட்டிலை மாற்றுங்கள் என்று கூறி அதன் பிறகு வைக்கப்பட்டது தான் ‘குஷி’ என்ற ஏ.எம்.ரத்னம் தான் ‘ரன்’ என்கிற டைட்டிலையும் வைத்தார்” என்றார்.

‘பையா’ டைட்டில் குறித்து பேசிய லிங்குசாமி, “ஏற்கெனவே கார்த்திக்கு ’பருத்திவீரன்’, ’ஆயிரத்தில் ஒருவன்’ என கொஞ்சம் பெரிய பெரிய வார்த்தைகளில் டைட்டில் இருக்கிறது. இது கொஞ்சம் சிறிதாக, கூலாக இருக்க வேண்டும் என நினைத்தோம். இது போன்ற விஷயங்களை மனதில் வைத்துக் கொண்டு இந்த டைட்டிலைக் கூறினேன். என்ன அர்த்தம் என்று கேட்டார்கள். எனக்கு அப்போதும் சரி இப்போதும் சரி, பையாவுக்கு என்ன அர்த்தம் என்று தெரியாது.

படத்தில் இடம்பெற்ற ‘அடடா மழைடா…’ பாடல் காட்சியை சாலக்குடியில் படமாக்கிய போது அடுத்தடுத்து உடைகளை மாற்ற வேண்டும் என்றால் கொஞ்சம் தூரத்தில் இருக்கும் கேரவனுக்கு செல்ல வேண்டும். ஆனால், அதற்கு நேரமாகும் என்பதால் இரண்டு பெண்களை அழைத்து சேலையை மறைப்பாக பிடிக்கச் சொல்லி எந்த தயக்கமும் இன்றி உடனடியாக உடை மாற்றிக் கொண்டு வந்து நடித்தார் தமன்னா.

இந்த படத்திற்கு இந்த இரண்டு நடிகர்களின் ஒத்துழைப்பும் ரொம்பவே முக்கியம். ’பையா’ படத்தில் தமன்னா நடிக்கும் போது அவருக்கு 18 வயது தான். அவருக்கு முதல் பெரிய ஹிட் ’பையா’ தான். அந்த சமயத்தில், ’பருத்திவீரன்’ பாடி லாங்குவேஜில் இருந்து மாறுவதற்கு கார்த்தி ரொம்பவே சிரமப்பட்டார்” என்று சொல்லி இருக்கிறார்.

’பையா 2’ படம் பற்றிய கேள்விக்கு பதில் சொன்ன அவர், ” ’பையா2’ படத்திற்கான கதையை கார்த்தியிடம் சொல்லி விட்டேன். 14 வருடங்கள் ஆகிவிட்டதே இப்போதுதான் தெரிகிறது. ஆனால், இந்த 14 வருடத்தில் கார்த்தியின் நடிப்பில், தோற்றத்தில் ஒரு மெச்சூரிட்டி வந்துவிட்டதால், ஒரு குழந்தைக்கு அப்பாவாக கூட நடித்து விட்டார் என்பதால் மீண்டும் ’பையா’ கதாபாத்திரத்தை திரும்பவும் பண்ண வேண்டுமா என யோசிக்கிறார். அதனால் இதற்கு பதிலாக வேறு ஏதாவது பண்ணலாமா என்று கேட்டுள்ளார்.

’பையா 2’ படத்தில் கார்த்தி நடிக்கவில்லை என்றால் வேறு ஒரு ஹீரோவை வைத்து படமாக்கும் விதமாகத்தான் அதை எழுதியுள்ளேன். ஆனால் ’பையா 2’விலும் கார் இருக்கும். ஆனால், வேறு காதலர்கள் இருப்பார்கள்” என்று சொல்லி இருக்கிறார்


Spread the love

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours