இத்தனை வருடங்களாக முரட்டு சிங்கிளாக வலம் வந்த நடிகர் பிரேம்ஜி திருமணம் செய்து கொள்ள இருப்பதாக அறிவித்து இருக்கிறார்.நடிகர், பாடகர், இசையமைப்பாளர் என பன்முகம் கொண்டவர் பிரேம்ஜி. இசையமைப்பாளர் கங்கை அமரனின் இளையமகனான இவருக்கு 44 வயதாகிறது. ஒவ்வொரு வருடமும் ’நான் இன்னும் முரட்டு சிங்கிள்தான்’ எனவும், ‘திருமணம் செய்து கொள்ளப் போவதில்லை’ எனவும் தெரிவித்து வந்தார் பிரேம்ஜி.
இந்த நிலையில்தான், தனது திருமணம் குறித்தான விஷயத்தை வெளிப்படையாகப் பகிர்ந்து கொண்டுள்ளார் பிரேம்ஜி.தனது எக்ஸ் பக்கத்தில் அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்தைத் தெரிவித்துள்ள அவர், ‘இந்த வருடம் நிச்சயம் நான் திருமணம் செய்து கொள்ளப் போகிறேன்’ எனக் கூறியுள்ளார். இவர் இந்த ட்விட்டைப் பகிர்ந்துள்ளதை அடுத்துப் பலரும் ’யார் அந்த பெண்?’ எனக் கேள்வி எழுப்பி தங்களது வாழ்த்துகளையும் பிரேம்ஜிக்கு தெரிவித்து வருகின்றனர்.
சமீபத்திய பேட்டிகளில் கங்கை அமரனும் பிரேம்ஜிக்கு விரைவில் திருமணம் எனச் சொல்லி இருந்தார். முன்பு பாடகி வினைத்தாவுடன் பிரேம்ஜி நெருக்கமாக இருக்கும் புகைப்படம் ஒன்று சோசியல் மீடியாவில் பரவியதால் இருவரும் காதலித்து வருவதாக தகவல் வெளியானது குறிப்பிடத்தக்கது.
+ There are no comments
Add yours