ஏரளமான இளம் பட்டாளங்களுடன் சூப்பர் ஸ்டார் கேமியோ ரோலில் நடக்கும் லால் சலாம் படத்தில் இசை வெளியீட்டு விழா நேற்று கோலாகலமாக நடைபெற்ற நிலையில் தனது குறித்து ஐஸ்வர்யா பேசியிருப்பது தற்போது வைரல் ஆகி வருகிறது .
தமிழ் சினிமாவின் இளம் கதயநாயகர்கள் பட்டியலில் டாப் 10 இடத்திற்குள் இருபவர்க்ள விஷ்ணு விஷால், விக்ராந்த். இவர்களின் கூட்டணியில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் அன்புமகளான ஐஸ்வர்யா ரஜினிகாந்தின் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படமே ‘லால் சலாம்’
கிரிக்கெட்டை மைய்யமாக வைத்து உருவாக்கப்பட்டுள்ள இப்படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினி அவர்கள் கேமியோ ரோலில் நடித்துள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு மற்றும் டப்பிங் பணிகள் முடிவடைந்த நிலையில் தற்போது இந்த படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் ஜெட் வேகத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது .
இந்நிலையில் இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நேற்று மிக பிரம்மாண்டமாக நடைபெற்றுள்ளது. அழகான விண்டஜ் காரில் கெத்தாக வந்து இறங்கிய சூப்பர் ஸ்டாரை அனைவரும் கரவோசம் எழுப்பி வரவேற்றனர் .
ரஜினிகாந்தை சங்கி என விமர்சிக்கிறார்கள்; அதனை கேட்டதும் எனக்கு வருத்தமாக இருந்தது ரஜினி ஒரு சங்கியாக இருந்தால் `லால் சலாம்’ படத்தில் நடித்திருக்க மாட்டார்; சங்கியால் இந்த படம் பண்ண முடியாது.
இந்த படத்தில் அவ்வளவு தைரியமாக யாருமே நடித்திருக்க மாட்டாங்க அவரை தவிர நீங்கள் எந்த மதமாக இருந்தாலும் இந்த படம் உங்களை பெருமைப்படுத்தும். ரஜினிகாந்த் நிச்சயமாக சங்கி இல்லை என இயக்குனர் ஐஸ்வர்யா ரஜினிகாந்த உருக்கமாக பேசியுள்ளார்.
+ There are no comments
Add yours