பிரம்மாண்டமாக கட்டப்பட்டுள்ள ராமர் கோயிலின் குடமுழுக்கு விழாவில் பங்கேற்பதற்காக நடிகர் ரஜினிகாந்த்அயோத்தி செல்ல உள்ளார். வரும் 22-ம் தேதி ராமர் கோயிலுக்கு கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. அப்போதுகுழந்தை வடிவிலான ராமர் சிலை பிரதிஷ்டை செய்யப்பட உள்ளது.
உத்தரப் பிரதேசம் மாநிலம், அயோத்தியில் உச்ச நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் ராமர் கோயில் கட்டப்பட்டுவருகிறது. இதற்காக ஸ்ரீராமர் கோயில் தீர்த்தஷேத்ரா அறக்கட்டளை அமைக்கப்பட்டு, அதை உ.பி. அரசுமேற்பார்வையிடுகிறது. ராமர் கோயிலுக்கு கடந்த 2020 ஆகஸ்டில் பிரதமர் நரேந்திர மோடி அடிக்கல் நாட்டினார். கட்டுமானப் பணிகள் நிறைவடைந்துள்ள நிலையில், ராமர் கோயிலை, ஜனவரி 22-ல் பிரதமர் நரேந்திர மோடிதிறந்து வைக்கிறார்.
இந்த விழாவுக்கான அழைப்பிதழை ரஜினியிடம் பாஜக சமூக ஊடகப் பார்வையாளர் அர்ஜூன மூர்த்தி வழங்கினார். இதையடுத்து சென்னையில் இருந்து மனைவி மற்றும் அண்ணனுடன் குடமுழுக்கு விழாவில் பங்கேற்பதற்காக வரும்21-ம் தேதி ரஜினி அயோத்தி செல்கிறார்.
ஒருநாள் அயோத்தியில் தங்கியிருந்து குடமுழுக்கு விழாவை பார்த்துவிட்டு வரும் 23-ம் தேதி சென்னை திரும்பஉள்ளார். ரஜினியை போலவே அமிதாப்பச்சன் உள்ளிட்ட முக்கிய திரைப்பிரபலங்களும் ராமர் கோயில் குடமுழுக்குவிழாவில் பங்கேற்க உள்ளனர்.
+ There are no comments
Add yours