லியோ’ படத்தின் வெற்றிக் கொண்டாட்டம் – ரசிகர்களுக்கு அனுமதி இல்லை!

Spread the love

‘சென்னை நேரு விளையாட்டு அரங்கில் நாளை நடைபெற உள்ள லியோ திரைப்பட வெற்றி விழா நிகழ்ச்சியில் பங்கேற்க ரசிகர்களுக்கு அனுமதி இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள ‘லியோ’ திரைப்படம் உலகம் முழுவதும் 500 கோடி ரூபாய் வசூலை நெருங்கியுள்ளது. படம் வெளியாவதற்கு முன்பும் பின்பும் பல சர்ச்சைகள் எழுந்தது. படத்தின் இரண்டாம் பாதிக்குக் கிடைத்த கலவையான விமர்சனத்தையும் லோகேஷ் கனகராஜ் ஏற்றுக் கொண்டார்.

இந்த நிலையில், ‘லியோ’ படத்தின் வெற்றிக் கொண்டாட்டம் நாளை சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் நடைபெற இருக்கிறது. இங்கேதான் முன்பு இசை வெளியீட்டு விழா நடத்தத் திட்டமிட்டு பின்பு ரத்தானது. ரத்தான இடத்திலேயே மீண்டும் படத்தின் வெற்றி விழா நடக்கிறது என ரசிகர்கள் உற்சாகமாக இந்த செய்தியை பகிர்ந்து வருகின்றனர். 200-300 கார்களுக்கும், அரங்கில் உள்ள இருக்கைகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப ரசிகர்களுக்கு அனுமதியும் வழங்கியுள்ளது காவல்துறை. மேலும், பேருந்துக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் புதுக்கட்டுப்பாடாக, ‘லியோ’ சக்சஸ் மீட்டுக்கு வருபவர்கள் என்ட்ரி பாஸ் உடன் தங்களது ஆதார் அட்டையையும் அவசியம் எடுத்து வந்தால் மட்டுமே நேரு உள்விளையாட்டு அரங்குக்குள் அனுமதிக்கப்படுவார்கள் என கட்டுப்பாடு விதிக்கப்பட்டு உள்ளது. அதுமட்டுமின்றி நாளை மாலை 4 மணி முதல் ரசிகர்கள் நேரு உள்விளையாட்டு அரங்கிற்கு அனுமதிக்கப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இதனிடையே, சென்னை நேரு விளையாட்டு அரங்கில் நாளை நடைபெற உள்ள லியோ திரைப்பட வெற்றி விழா நிகழ்ச்சியில் பங்கேற்க ரசிகர்களுக்கு அனுமதி இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேநேரத்தில் விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள் கூறப்பட்டுள்ளது.

அண்மையில் ஏ.ஆர்.ரஹ்மான் இசை நிகழ்ச்சியின் போது கூட்ட நெரிசல் ஏற்பட்டு அது மிகப்பெரிய பிரச்சினையாக வெடித்தது. அதுபோன்ற சம்பவங்கள் நடந்துவிடாமல் இருப்பதற்காக தான் இத்தகைய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.


Spread the love

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours