வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த விஜய் தேவரகொண்டா!

Spread the love

ராஷ்மிகா மந்தனாவுக்கு விஜய் தேவரகொண்டாவுக்கும் அடுத்த மாதம் நிச்சயதார்த்தம் நடக்கவிருப்பதாக தகவல்கள் வெளியாகிய நிலையில் விஜய் அதற்கு மறுப்புத் தெரிவித்துள்ளார்.

2016ஆம் ஆண்டு வெளியான கிரிக் பார்ட்டி படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானவர தான் கொண்ட ராஷ்மிகா மந்தனா. பெங்களூருவை பூர்வீகமாகக் கொண்ட இவர், விஜய் தேவரகொண்டாவுடன் இணைந்து கீதா கோவிந்தம் என்ற படத்தில் நடித்திருந்தார். இந்த படம் மிகபெரும் வெற்றியை பெற்றது. இந்த படத்தின் மூலம் நடிகை ராஷ்மிகா மந்தனா தமிழ் ரசிகர்கள் மத்தியிலும் பிரபலமானார். அதனையடுத்து டியர் காம்ரேட் படம் பெரியளவில் பேசப்படவில்லை. இதனைத் தொடர்ந்து புஷ்பா உள்ளிட்ட படங்களில் நடித்த்திருந்தார்.

தெலுங்கில் திரைத்துறையில் நடித்து வந்த ராஷ்மிகா, கார்த்தி நடித்த சுல்தான் படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார். இதனையடுத்து விஜய்யுடன் வாரிசு படத்தில் நடித்தார். தமிழில் இவர் நடித்த இந்தப் படமும் கலவையான விமர்சனங்களையே பெற்றது. தெலுங்கு, தமிழ் சினிமா மட்டும் இன்றி ஹிந்தியில் குட் பை, மஜ்னு, அனிமல் உள்ளிட்ட படங்களில் நடித்திருக்கிறார்.

இந்த நிலையில், ராஷ்மிகா மந்தனாவும், விஜய் தேவரகொண்டாவும் காதலில் இருப்பதாகவும், பிப்ரவரி இரண்டாவது வாரத்தில் அவர்களுக்கு நிச்சயதார்த்தம் நடைபெறவுள்ளதாகவும் கூறப்பட்டது. அது மட்டும் இன்றி கடந்த மாதமாக, விஜய் தேவரகொண்டா மற்றும் ராஷ்மிகா மந்தனா மாலத்தீவு பயணத்தில் இருப்பதாகவும் செய்திகள் வெளியாகின. ஆனால் அதுகுறித்து ராஷ்மிகா மந்தனா மௌனம் காத்து வருகிறார்.

இந்த நிலையில் ராஷ்மிகா மந்தனாவுடனான நிச்சயதார்த்த வதந்திகள் குறித்து விஜய் தேவரகொண்டா மௌனம் கலைத்துள்ளார். இது குறித்து விளக்கம் அளித்த விஜய், “பிப்ரவரி மாதத்தில் நான் திருமணமோ அல்லது நிச்சயதார்த்தமோ செய்து கொள்ளப்போவதில்லை.

இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை நான் திருமணம் செய்துகொள்ள வேண்டும் என்று ஊடகங்கள் நினைக்கின்றன. ஒவ்வொரு ஆண்டும் இந்த வதந்திகளை நான் கேட்டுக்கொண்டே இருக்கிறேன். எனக்கு கையோடு எப்படியாவது திருமணம் செய்து வைக்க வேண்டும் என்ற முனைப்பில் மீடியாக்கள் இருக்கின்றன” என கூறி விஜய் தேவரகொண்டா வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்திருக்கிறார்.


Spread the love

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours