வெளியான ’வணங்கான்’படத்தின் டீசர்!

Spread the love

இயக்குநர் பாலா இயக்கத்தில் நடிகர் அருண் விஜய் நடித்துள்ள ‘வணங்கான்’ பட டீசர் தற்போது வெளியாகியுள்ளது.

இயக்குநர் பாலா இயக்கத்தில் நடிகர் அருண்விஜய், ரோஷினி பிரகாஷ் ஆகியோர் ’வணங்கான்’ படத்தில் நடித்துள்ளனர். இதன் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ள நிலையில், சமீபத்தில் அதன் முதல் பார்வை வெளியானது. ஒரு பக்கம் விநாயகர் சிலையும் இன்னொரு கடவுள் இல்லை என சொன்ன பெரியார் சிலையும் வைத்தபடி உடல் முழுக்க சகதியுடன் மேலே பார்த்தபடி இருக்கும் அருண் விஜய் அந்த போஸ்டரில் உள்ளார். படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைக்க, இயக்குர் சுரேஷ் காமாட்சி இந்தப் படத்தைத் தயாரித்துள்ளார்.

இப்போது இதன் டீசர் வெளியாகியுள்ளது. கன்னியாகுமரி நிலப்பரப்பில் கதை நடப்பதாக இந்த டீசரில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. பாலா படங்களின் கதாநாயகர்கள் போலவே அழுக்கு முகமும் உடையும், அடிதடியுமாக வருகிறார் அருண் விஜய். அதேபோல, வெளியான டீசரில் வசனங்கள் எதுவும் இடம்பெறவில்லை. இறுதியாக ’பிதாமகன்’ விக்ரம் போல, ஜெயிலில் ஆக்ரோஷமாக சத்தமிடுகிறார் அருண் விஜய். ‘பிதாமகன்’ விக்ரம் போலவே இவரும் படம் முழுக்க பேசாமல் வருகிறாரா என ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

முன்பு இயக்குநர் பாலா, சூர்யாவை வைத்துதான் இந்தப் படத்தை ஆரம்பித்தார். சூர்யாவின்2டி நிறுவனம் இதைத் தயாரித்தது. ஆனால், சூர்யா-பாலாவுக்கு இடையிலான கருத்து வேறுபாடுகள் காரணமாக அவர் படத்தில் இருந்து விலகினார் என்பது குறிப்பிடத்தக்கது.


Spread the love

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours