உடல் நலக்குறைவு காரணமாக நடிகர் பிஜிலி ரமேஷ் இன்று அதிகாலை காலமானார்.
சமூக வலைத்தளங்களின் மூலம் பிரபலமான இவர், தனது நகைச்சுவை வசனத்தால் மக்களிடம் கவனம் பெற்றார்.
கோலமாவு கோகிலா திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் நடிகராக அறிமுகமான இவர், நட்பே துணை, கோமாளி உள்ளிட்ட படங்களில் சிறு கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்.
கிடைத்த வாய்ப்புகளை குடிப்பழக்கத்தால் இழந்து வந்த இவர், உடல்நலக்குறைவால் உயிரிழந்தார்.
+ There are no comments
Add yours