நடிகர் பிருத்விராஜ் மும்பை பாலி ஹில் பகுதியில் ஆடம்பரமான வீடு ஒன்றை வாங்கியுள்ளார்.
நடிகர் பிருத்விராஜ், ‘லூசிஃபர்’ படத்தின் அடுத்த பாகமாக ‘எல்2: எம்புரான்’ படத்தை இயக்கி வருகிறார். இதில் மோகன்லால் ஹீரோவாக நடிக்கிறார். இதையடுத்து ‘சலார்’ 2 உட்பட சில படங்களில் நடித்து வரும் அவர், மும்பை பாலி ஹில் பகுதியில் ஆடம்பரமான வீடு ஒன்றை வாங்கியுள்ளார். 2,971 சதுர அடி கொண்ட அந்த வீட்டை தனது தயாரிப்பு நிறுவனத்தின் பெயரில் ரூ.30.6 கோடிக்கு வாங்கியுள்ளார். இதன் பத்திரப்பதிவுக்கு மட்டும் அவர் ரூ.1.84 கோடி செலுத்தியுள்ளார். பிருத்விராஜுக்கு பாலி ஹில் பகுதியில், ரூ.17 கோடி மதிப்பில் ஏற்கெனவே ஒரு வீடு இருக்கிறது.
+ There are no comments
Add yours