கூலி’ படப்பிடிப்பில் கலந்து கொள்வதற்காக இன்று காலை நடிகர் ரஜினிகாந்த் ஜெய்ப்பூர் கிளம்பிச் சென்றுள்ளார்.
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த நடிக்கும் ‘கூலி’ படத்தின் படப்பிடிப்பு ஜெய்ப்பூரில் நடக்கிறது. இந்நிலையில், படப்பிடிப்பிற்காக ஜெய்ப்பூர் கிளம்பிச் சென்ற நடிகர் ரஜினிகாந்த், சென்னை விமானநிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது, “ஜெய்ப்பூரில் நடைபெறும் ‘கூலி’ படத்தின் படப்பிடிப்பில் பங்கேற்க செல்கிறேன். ‘கூலி’ படத்திற்குப் பின்புதான் புதுப்படங்கள் பற்றி சொல்ல முடியும்” என்றார்.
பின்பு, பெஞ்சல் புயலால் ஏற்பட்ட கனமழை காரணமாக திருவண்ணாமலையில் 7 பேர் இறந்துள்ளது பற்றி நிருபர் ஒருவர் கேள்வி எழுப்பினார். “அது எப்போ? மை காட்! மன்னிச்சுடுங்க” என கேட்டு அதிர்ச்சியடைந்த படியே அங்கிருந்து கிளம்பி சென்றார்.
+ There are no comments
Add yours